ads
தமிழகத்தில் நீட் தேர்வு: தேர்வும் தேர்வின் விதிமுறைகளும்
ராம் குமார் (Author) Published Date : May 05, 2019 16:29 ISTஇந்தியா
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 14 மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
பல்வேறு ஏதிர்ப்புகள் தமிழகத்தில் தாண்டி தேர்வு எழுத மாணவர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். கடந்த வருடம் விட இந்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.தேர்தல் நடக்கும் மாவட்டங்களின் தேர்வு மையங்கள் மட்டும் வேறு இடங்களில் மற்றப்பட்டு உள்ளது. தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நிர்ணயக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் மாணவர்களுக்காக தேர்வு நேரம் மற்றப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் முழுக்கை உடைகள், ஷோக்கள் அணியக்கூடாது. பெண்கள் முகத்தை மறைக்கும் படி உடைகள் அணியக்கூடாது மேலும் ஆபரணங்கள் எதுவும் அணியக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரானிக் பொருள்கள் ஏதும் எடுத்து செல்ல கூடாது எனவும், எழுது பொருட்கள் ஏதும் எடுத்து செல்லக்கூடாது என்றும் விதிமுறைகள் விதித்துள்ளனர். எழுது பொருட்கள் அனைத்தும் தேர்வு மையங்களில் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
தமிழில் உள்ள கேள்வி ஏதேனும் தவறுகள் இருந்தால் ஆங்கில கேள்வி படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.