ads
தமிழ்நாடு கொரோனா: தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்
புருசோத்தமன் (Author) Published Date : Apr 25, 2020 13:09 ISTஇந்தியா
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் முறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் முன்னோடியாக தொடர்வது அனைவரும் அறிந்த ஒன்று. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசின் அதிரடி செயல்பாடுகள், மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த துறைகள் மற்றும் காவல்துறையினர்.
கடந்த 2020, மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் தங்களால் முடிந்த நிதி உதவியை அரசுக்கு அளித்துவருகிறார்கள்.
பால் விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது
அரசும் வேலையிழந்து இருக்கும் மக்களுக்கு நிதி உதவி மற்றும் இலவசமாக உணவுகளை வழங்கி கொண்டுவருகிறது. இன்று தமிழக அரசு அறிவித்த நிவாரண அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறவு (E.S.I) திட்டத்தின் கீழ், பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். இதற்காக ரூ.2.177 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.