ads
கலிங்கத்தரையரால் கிபி 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டு மதுரையில் கண்டுபிடிப்பு
விக்னேஷ் (Author) Published Date : Sep 23, 2020 17:54 ISTஇந்தியா
மதுரை அருகே கல்லுப்பட்டியில், கிபி 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரப்பெரி கண்மாய் மடையில் மிக பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதாக வந்த செய்தியை அடுத்து, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு குழுவின் தலைவர் ராஜகுரு தலைமையில் மடை கல்வெட்டை ஆராய்ச்சி செய்ததில் கிபி 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு என்பது தெரியவந்துள்ளது.
தேவன் குறிச்சி மலையில் வடகிழக்கு பகுதியில், இயற்கையாக அமைந்த பாறையில் மடையமைத்துள்ளனர். இதில் ஒரு கல்லில் ஏழு வரிகளில் ஒரு கல்வெட்டு பாடல் முறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள பெயர் கலிங்கத்தரையர் பெருங்குன்றை பெரியகுளம்.
இந்த கண்மாய் மற்றும் மடை கலிங்கத்தரையரால் கிபி 13ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த பகுதியில் குறுநிலத் தலைவராக வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இக்கண்மாய் அமைத்த அவருடைய சிறப்பை கல்வெட்டில் பாடல் மூலம் எழுதப்பட்டுள்ளது.