கேரளாவில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்
விக்னேஷ் (Author) Published Date : Sep 06, 2021 12:05 ISTஇந்தியா
மத்திய சுகாதார மையத்திலிருந்து ஒரு குழு ஞாயிற்றுக்கிழமை கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திற்கு சென்று, அங்கு 12 வயது சிறுவன் நிபா வைரஸால பாதிக்கப்பட்டு இறந்தார் மற்றும் அந்த பகுதியில் இருந்து ரம்புட்டான் பழங்களின் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
அரசாங்கத்தின் அறிக்கையின்படி, தொற்றுநோயின் மூலத்தை அடையாளம் காணவும், தொற்றுநோயின் தோற்றம் ஒரு வௌவால் சாப்பிட பலவகை மூலமா என்பதை உறுதிப்படுத்தவும் இந்த மாதிரி உதவும்.
டெல்லியின் தேசிய நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையத்தின் குழு, சிறுவன் சாப்பிட்ட உணவு மற்றும் அவர் தொடர்பு கொண்ட விலங்குகளை அடையாளம் காண குடும்பத்தினருடனும், சிறுவனுடன் நெருக்கமானவர்களுடனும் கேட்டறிந்துள்ளனர்..
சிறுவனிடம், குறைந்தபட்சம் 18 நெருங்கிய நபர்கள் தொடர்பிலும், முக்கியமாக உறவினர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 150 இரண்டாம் நிலை தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டு சுகாதார ஊழியர்களுக்கு நிபா வைரஸின் அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர்.
ஒவ்வொருவரும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது மட்டும்மின்றி , நோயின் அறிகுறிகள் இருந்தால் விரைவில் சுகாதார நிபுணர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்துள்ளது, சுகாதார துறை.