நிப்ட்டி பங்குச் சந்தை: உள்நாட்டு பயணத்தை திறப்பதால் ரயில், விமான பங்குகள் ஏற்றம்
புருசோத்தமன் (Author) Published Date : May 12, 2020 15:02 ISTஇந்தியா
நிப்ட்டி 50 தொடக்க புள்ளிகள் - 9168.85, அதிக உச்சத்தை தொட்ட புள்ள விவரம் - 9168.90, குறைந்த அளவு 0943.95 மற்றும் சி.எம்.பி - 9110. எங்கள் காலை செய்தியில் நாங்கள் குறிப்பிட்டது, நிப்ட்டி உயர் மட்ட புள்ளிகளை தக்கவைக்க தவறியது மற்றும் ரிலையன்ஸ், பிஇஎல் மற்றும் எஸ்ஆர்டிராஸ்ஃபின் தலைமையில் கிட்டத்தட்ட 2% வீழ்ச்சியடைந்தது.
பேங்க்நிஃப்டி சுமார் 18400 மட்டங்களில் 2.5% குறைவாக வர்த்தகம் செய்தது அதிக மந்தநிலையைக் குறிக்கிறது. ஆயில் நிலவரத்தில் பாங்க்நிப்ட்டி மற்றும் நிப்ட்டி எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி இரவு 8 மணிக்கு உரையாற்ற திட்டமிட்டுள்ள நிலையில், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முழு உலகமும் பயனடைவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ ஆகிய போக்குவரத்து துறை நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இண்டிகோ விமான நிறுவனத்தின் பங்குகள் நேற்றையதை விட 4% அதிகமாக வர்த்தகம் செய்திருக்கிறது.
இன்று லாபம் அடைந்த பங்குகளில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நிறுவனங்கள், VEDL, Indigo, NTPC, UPL மற்றும் AuroPharma. அதிக வீழ்ச்சியடைந்த ஐந்து இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் SRTRANSFIN, PEL, IBHousing, Reliance மற்றும் BandhanBank.