இந்திய பெண் சாதனை: சிறிய விமானத்தில் தனியாக அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியை கடந்தார்
கௌரிசங்கர் (Author) Published Date : May 16, 2019 13:11 ISTஇந்தியா
இந்திய பெண் சாதனை: விமானங்களிலேயே மிக இலகு ரக விமானம் என்றால் ஒரே ஒருவர் மட்டும் பயணிக்கும் சிறிய ஸ்போர்ட்ஸ் விமானமான "எல்.சி.ஏ" எனப்படும் விமானம் தான். இதில் வெகு தூரம் பயணிப்பதே ஆபத்தானது தான். ஆனால் மும்பையை சேர்ந்த 23 வயதே ஆகும் கேப்டன் ஆரோகி பண்டிட் மிகவும் ஆபத்தான அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியை தன்னந்தனியாக இந்த எல்.சி.ஏ விமானத்தில் கடந்து குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விமான போக்குவரத்து துறையை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மே 13 ஆம் தேதி நள்ளிரவு முதல் இன்று 14 ஆம் தேதி காலை வரை 3,000 கிமீ நீளமுள்ள பனிப்பாறைகள், மோசமான சீதோஷ்னம் நிறைந்த மிகவும் ஆபத்தான கடல்பரப்பை ஆரோகி பண்டிட் கடந்துள்ளார். இவர் ஸ்காட்லாந்தின் விக் விமானத்தளத்தில் இருந்து தனது பயணத்தை கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் எரிபொருளுக்காக தரையிரங்கி தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
மேலும் கிரீன்லாந்தின் ஆபத்து நிறைந்த பனிப்பாறைகளை தனியாளாக இலகு ரக விமானத்தில் கடந்து புதிய உலக சாதனையையும் இவர் நிகழ்த்தியிருக்கிறார். இந்நிலையில் இவர் மகளிருக்கான அதிகாரமளித்தல் நிகழ்ச்சியின் கீழ் ஆரோகி பண்டிட் மற்றும் அவரது தோழியான கிய்தெயர் ஆகியோர் தங்களது சிறிய ரக விமானத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். ஒரு ஆண்டு முழுவதும் நீண்ட தூர விமானப் பயணங்களை முடித்துவிட்டு வரும் ஜூலை 30 ஆம் தேதி இருவரும் தாயகம் திரும்புகின்றனர்.