Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் ஊரடங்கில் இருக்கும் தடைகள் மற்றும் தளர்வுகள்

ஊரடங்கில் இருக்கும் விவரங்கள். கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்ட கோவிட்19 கட்டுப்படுத்த ஊரடங்கு அடுத்த மாதம் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், சில தளர்வுகள் மற்றும் விதிமுறைகள் மூலம் மத்திய அரசு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இரண்டாம் ஊரடங்கில், தடை செய்யப்பட்டுள்ள விவரங்கள் 

  • கல்வி நிறுவனங்கள்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், இயங்கக்கூடாது. சில பள்ளிகள் தற்பொழுது, மாணவர்கள் வீட்டில் இருந்தே படிப்பதற்கு, சில செயலிகள் உதவியுடன் வீடியோ மூலம் பாடங்களை நடத்த தொடங்கிவிட்டார்கள்.
  • மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து முற்றிலும் தடை. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், விமானங்கள், ரயில் சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்து வாகனங்கள் மற்றும் விமானங்கள் வழக்கம் இயங்கலாம்.
  • வாடகை வாகனங்களுக்கு தடை, ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள்.
  • மற்ற மாநிலங்குளுக்கான போக்குவரத்து தடை, ஏற்கனவே அனுமதி பெற்ற அத்தியாவசிய போக்குவரத்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழக்கம் போல் இயங்கும்.
  • மாவட்டத்தில் சிறப்பு அனுமதி பெறாத நிறுவனங்கள் இயங்க தடை.
  • தனிப்பட்ட திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் இருக்கும் திரையரங்குகள் இயங்க தடை. 
  • பொது நீச்சல் குளங்கள் / ஜிம், விடுதிகளில் இருக்கும் நீச்சல் குளங்கள்  / ஜிம் , குடியிருப்புகளில் இருக்கும் நீச்சல் குளங்கள்  / ஜிம் தடை செய்யப்பட்டுள்ளது.
  • வணிக வளாகங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. தகுந்த அறிவிப்பில்லாமல் மே 3ஆம் தேதி பின் திறப்பதற்கும் தடை.
  • மக்கள் அதிகம் கூடம் பூங்காக்கள், மதுபான கடைகளுக்கு தடை.
  • கோயில்கள் மற்றும் வழிபட்டு தளங்களுக்கு தடை.
  • பொது விழாக்கள், அரசியில் கூட்டங்கள், சமுதாய நிகழ்ச்சிகளுக்கு தடை.
  • எதிர்பாராத நடக்கும் இறப்புகளால், இறுதி சடங்கில் போதுமான பாதுகாப்பு, முக கவசங்களுடன் மற்றும் சமூக தூரத்தை கடைபிடித்து கலந்துகொள்ளலாம் மற்றும், உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் இருபது நபருக்கு மேல் கூடி துக்கம் அனுசரிக்க அனுமதி இல்லை.

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் இரண்டாம் ஊரடங்கில், தளர்வு செய்யப்பட்டுள்ள விவரங்கள்- இதில் அனைத்திற்கும் சமூக தூரம் மற்றும் முக கவசம் மற்றும் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும்.

  • ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வானங்கள் மற்றும் அனுமதி பெற்ற இதை சார்ந்த உற்பத்தியாளர்களுக்கு இயங்கலாம்.
  • முறையாக அனுமதி பெற்ற மீனவர்களுக்கு அனுமதி.
  • வேளாண் சம்மந்தப்பட்ட வேலைகளை சமூக தூரத்தை கடைபிடித்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களில் குறைவான ஆட்களுடன் வேலை செய்யவும் அனுமதி.
  • வங்கிகள் காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணிவரை இயங்க அனுமதி. வங்கியில் பணிபுரியும் பணியாளர்கள், சுழற்சி முரையில் பணிக்கு வர அனுமதி. வழக்கம் போல் ஏ.டி.எம். மெஷின்கள் இயங்கும்.
  • மருத்துவம் சார்ந்த துறைகள் அனைத்தும் இயங்க அனுமதி.
  • கட்டுமான இடங்களில் ஏற்கனவே பாதுகாப்பாக தொழிலாளர்களை தங்கவைத்து இருப்பவர்கள் வேலைகளை தொடரலாம். கண்டிப்பாக சமூக தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.
  • தபால் நிறுவனங்கள், கூரியர் நிறுவனங்கள் இயங்க அனுமதி.
  • ஐடி நிறுவனங்கள் கண்டிப்பாக குறைந்த அளவிலான பணியாளர்களுடன் சமூக தூரத்தை கடைபிடித்து இயங்க அனுமதி.
  • அரசு அங்கீகரிக்கப்பட்ட நூறு நாள் வேலையாட்கள், கிராமப்புறங்களில் இருக்கும் செங்கல் சூளைகள், கிராமப்புறங்களில் இ சேவை மையங்கள் பணிகளை தொடரலாம்.
  • ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம்.
  • ப்ளம்பர், எலெக்ட்ரிசியன், மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோருக்கு அனுமதி.
  • சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி. பணியாளர்களை அழைத்து வர நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
  • அரசு அலுவலகங்கள் குறைந்த அளவில் 33 சதவீத  ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்.

ஏப்ரல் 20க்கு பிற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் ஊரடங்கில் இருக்கும் தடைகள் மற்றும் தளர்வுகள்