ads
எதிர்கால தலைமுறை காப்சூலில் தண்ணீரை பெறுவார்கள்: சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை.
ராம் குமார் (Author) Published Date : May 03, 2019 05:30 ISTஇந்தியா
தாத்தா ஆற்றில் நீரை பார்த்தார். தந்தையர் நீரை கிணற்றில் கண்டனர். தற்போதைய தலைமுறையினர் அதை குழியிலும், குழந்தைகள் நீரை புட்டிகளில் பார்க்கின்றனர். அதனை இன்னும் மிகச் சிறிய அளவில் 'காப்சூலில்' காணப்படும் அளவிற்கு குறைக்க வேண்டாம் என சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி குழு எச்சரித்தது.
கடுமையான நடவடிக்கை அல்லது உகந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாட்டில் உள்ள நீர் வரத்து முற்றிலும் வற்றி பூஜியம் அடையும் நிலை வெகு தூரத்தில் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நம் மாநிலத்தில் அனைத்து வளங்களையும் கொண்டிருக்கின்ற போதிலும், அதனை சரியாக பயன்படுத்தாத காரணத்தினால் வளமான நிலங்கள் செயல் இழந்து, திடமான கழிவுப்பொருட்களை கொண்டுள்ளது. நீர்வளங்களையும் மற்றும் நீர்வழிகளைப் பாதுகாக்கும் நோக்கில் நீதிமன்றம் சில வழிகளை கூறியுள்ளது.
அதில் ஒன்று இராணுவ ஆக்கிரமிப்பாளர்களை தெளிவாகுவதாகும். தலைமைச் செயலாளர் தலைமையிலான பொதுப்பணித் துறையின் சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசாங்கம் அமைக்கவிருக்கின்றது. சிறப்பு பிரிவில் வருவாயின் செயலாளர்கள், நில நிர்வாகத்தின் ஆணையாளர், மின்சாரத்துறை தலைவர், காவல் துறை சேர்ந்த பலர் இச்சிறப்பு பிரிவில் உள்ளடங்குவர்.
நீர்வளங்கள், நீர்வழிகள், கால்வாய்கள், தொட்டிகள் முதலியனவற்றை மாநில முழுவதும் மேற்பார்வை இடப்படும். மேலும் நீர் நிலைகள் மேல் இருக்கும் ஆக்கிரமைப்புகளை சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளையுடன் இணைந்து அகற்றுவதன் போன்ற செயல்களை தனி பிரிவு பார்த்துக்கொள்ளும் என்று அறிவித்தனர்.
இப்பணிக்காக ஊழியர்களை பணிக்கு அமர்த்தி, அதோடு இந்த கடுமையான கடமைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான ஊழியர்கள் அவர்களது ஆதரவு வழங்க வேண்டும் என்றனர். மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மாநில தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணைக்குழு ஆய்வு செய்ய வேண்டும் தொழிசாலைகளில் இருந்து வரும் கழிவுகள் ஆறு, குளங்கள், ஏரி , சமுத்திரங்கள் முதலியவற்றில் கலங்காமல் இருக்கின்றதா என பார்த்து கொள்ளவேண்டும்.
அவ்வாறு நீரை அசுத்தம் செய்தால், முதலில் புகைப்படம் எடுக்க வேண்டும், உடனடியாக மின்சார துறைக்கு அறிவித்து மின்சார விநியோகிப்பதை துண்டிக்க வேண்டும். அத்தகைய செயலை மின்சார வாரியம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் குழு விரித்துரைத்தது.
அத்தகைய தொழிற்சாலைகளை மூடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சரியான வெளியீட்டை அவர்கள் நிர்ணயிக்க வேண்டும், மேலும் குழாய் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். கழிவு நீரை எந்த நதி, ஆறுகள், குளங்கள் போன்றவற்றில் கலக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
டிரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலத்துக்கடியில் உள்ள இணைப்புகளை அடையாளம் காண்பது மிகவும் சாத்தியமற்றது என்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.