ads

மருத்துவர் பிரியங்கா கொலை வழக்கு: என்கவுண்டர் நடத்திய போலீஸ்

மருத்துவர் பிரியங்கா கொலை வழக்கு: என்கவுண்டர் நடத்திய போலீஸ்

மருத்துவர் பிரியங்கா கொலை வழக்கு: என்கவுண்டர் நடத்திய போலீஸ்

ஹைதெராபாத் ஷாடனகர் எண்ணும் இடத்தில 2019 நவம்பர் மாதம் 27 ஆம் தேதி பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மர்ம நபர்களால் எரித்து கொல்லப்பட்டார்.

போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், மருத்துவர் பிரியங்காவின் வாகனத்தை பஞ்சர் செய்து, உதவி செய்வதுபோல் நடித்து , இந்த மோசமான சம்பவத்தை நான்கு பேர் கொண்ட கும்பல் நடத்தியுள்ளனர் என்று கண்டறிந்தனர். டோல்கேட்டின் கேமரா மூலம் அவர்களின் வாகனத்தின் எண்ணின் மூலம், நால்வரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

போலீஸ் விசாரணைக்காக காவலில் எடுத்து, இன்று காலை சம்பவம் நடந்த இடத்தில் செயல் முறை விளக்கத்திற்காக அழைத்து சென்ற போது , தப்பிக்க முயன்றதால் நால்வரையும் போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

குற்றவாளிகளான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொள்ளப்பட்டுள்ளது, பாதிப்படைந்த பெண் மருத்துவரின் குடும்பம் மற்றும் அப்பகுதி மக்களிடம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மருத்துவர் பிரியங்கா கொலை வழக்கு: என்கவுண்டர் நடத்திய போலீஸ்