டெல்லி மசூதி கொரோனா எதிரொலி: அனைத்து மாநிலங்களும் உஷாராக இருங்கள், அரவிந்த் கெஜ்ரிவால்
புருசோத்தமன் (Author) Published Date : Mar 31, 2020 20:40 ISTஇந்தியா
டெல்லி: மார்ச் மாதம் ஆரம்பத்தில் டெல்லியில் உள்ள மசூதியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 441 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்தார். கோவிட் 19, இருபத்தி நான்கு பேருக்கு இருப்பதை உறுதி படுத்திய நிலையில், மேலும் பலர் நோயின் பாதிப்பு இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
"மார்க்கஸ் நிஜாமுதீன்" இல் 1,500 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர், இவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். "இது மிகவும் பொறுப்பற்ற செயல்" என்று டில்லி முதல்வர் கூறினார், 97 கொரோனா வைரஸ் நோயாளிகள் இருக்கிறார்கள், இதில் 24 பேர் அதே மசூதி வளாகத்திலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
"உலகெங்கிலும் கொரோனா பாதிப்பால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், இந்த நேரத்தில் அனைத்து மத சார்ந்த இடங்களும் செயல்படாத நிலையில், இவர்கள் இப்படி நடந்துகொண்டது, கடுமையான சட்ட மீறலாக கருத்துப்படுகிறது. மேலும் இந்த மத கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளதால், மற்ற மாநிலங்களிலும் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.