ads
கொரோனா தமிழ்நாடு: மக்களே அனாவசியமாக போலீசிடம் அடி வாங்காதீர்கள்
புருசோத்தமன் (Author) Published Date : Mar 25, 2020 19:26 ISTஇந்தியா
தமிழகத்தில் நேற்றே 144 தடை இருந்தாலும், இன்று முதல் 144 தடை மிக தீவிரம் அடைகிறது. பொதுமக்கள் தயவு செய்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உதவும் வகையில், யாரும் வீட்டை வீட்டு வெளியே வரவேண்டாம்.
கொரோனா தொத்து மற்றவர்களிடம் இருந்து நமக்கும், நமக்கே அறியாமல் கொரோனா வைரஸ் நம்மிடம் இருந்தால், அதை மேலும் யாருக்கும் பரப்பாமல் இருக்க, நாம் வீட்டினுள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
தமிழகத்தில், நோய் தொத்து அதிக எண்ணிக்கையில் இருப்பதால், மருத்துவர்கள் அயராத உழைத்து கொண்டிருக்கிறார்கள். போதுமான அவசர சிகிச்சை உபகரணங்கள் குறைவாக இருப்பதாலும், இதற்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்காமல் இருப்பதாலும், நாம் அரசிற்கு உறுதுணையாக இருப்பது தனி மனிதனின் கடமை.
மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவும் காரணம் தான், 144 தடை வந்துள்ளது. குடும்பத்தை விட்டு வேலைசெய்யும் மருத்துவர்களை போல், காவல் துறையில் இருக்கும் அதிகாரிகளும் செயல் படுகிறார்கள். இவர்களும் மிகுந்த சிரமத்தில் செயல் படுவதால், சற்று மக்களின் அறியாமையை கண்டு கோபம் அடைய வாய்ப்புண்டு. இதனால், இவர்கள் பொறுப்பில்லாமல் வெளியே நடமாடும் மக்கள் அடிவாங்க வாய்ப்புள்ளது.
இவர்களிடம் அடி வாங்கி, இதனால் காயம் ஏற்பட்டால், நமக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்வதும் கடினம். தற்பொழுது சில தனியார் மருத்துவமனையும் கொரோனா தடுப்பிற்காக செயல்பட தொடங்கி விட்டது. எனவே, நமக்காக கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களுக்காக நாம் அனைவரும் வீட்டில் இருப்பது அவசியம்.