ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை
ராம் குமார் (Author) Published Date : Jun 04, 2019 23:44 ISTஇந்தியா
கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் தலைக்கவசம் அணியாமல் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்ட நேரிட்டால் ரூபாய் 500 அபராதம் செலுத்த வேண்டி வரும். ஆச்சரியம் என்னவென்றால் தலை கவசம் அணியாமல் செல்வது எந்த ஒரு போக்குவரத்து துறையினரும் பார்க்கவில்லை பிடிக்கவும் இல்லை என எண்ணுவது தவறு. இவை அனைத்தும் கோவை மாநகர போக்குவரத்துக்கு காவல் அதிகாரிகள் வானில் உள்ள மூன்றாம் கண்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தலை கவசம் மட்டும் அல்லது இரவு நேரங்களில் சாலை விதிமுறைகளை மீறுதல், சிகப்பு விளக்கிற்கு நிற்காமல் செல்வது போன்ற வீதிமீறல்களுக்கும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் இல்லாவிட்டாலும் அபராதம் செலுத்த வேண்டும்.
கோயம்புத்தூர் நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் நிலையான உயர் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இரவிலும் கூட வாகனம் எண்ணை கண்டுபிடிப்பதற்கான துல்லியமாக தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கோவை குடிமக்கள் போக்குவரத்து நெறிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
எவ்வித விதிமீறல்களாக இருந்தாலும் போக்குவரத்து காவல்துறையினரை சந்திக்க நேரிடும். போக்குவரத்து துறையினர் விதிகளை மீறிய தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை அறிக்கை தாளில் தகுந்த நபர்களிடம் அளிப்பர். மீறலுக்கான அபராதத்தை தொகை தெரிவிக்கப்படும். அபராதத்தை கட்டவில்லை என்றால் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும்.
போக்குவரத்து மீறல்களை தடுக்கவும் உயிர்களை காக்கவும் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருக்கும் என பலர் நினைக்கிறார்கள். மேலும், நகரத்தில் உள்ள பல பகுதிகளில் நிலையான உயர் சிசிடிவி காரணமாக குற்றங்கள் குறையப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் காவல் அதிகாரிகள் வீடு தேடி அபராதத்தை வசூலிப்பது சிரமமான ஒன்றாக இருப்பதாக கருதுகின்றனர். மேலும் வாகன ஆர்.சி புத்தகத்தில் உரிமையாளர் பெயர் உள்ளதால், சிலர் வாகனத்தை விற்றபின் மாற்றாமல் இருப்பதால் சிரமங்கள் ஏற்படுகின்றது. டாக்சி டிரைவர்கள் செய்யும் தவறினால் உரிமையாளர்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றது.
போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் அபராதம் கட்ட நேரிடும். கோயம்புத்தூர் போக்குவரத்து காவல்துறையினரால் மேம்படுத்தப்பட்ட இந்நடவடிக்கை கோயம்புத்தூர் மக்களின் பாதுகாப்பிற்கும் சிறந்த வழியாக அமைந்துள்ளது.