அமேசான் ப்ரைம் தினம் 2019 ஜூலை 15 ஆம் தேதி தொடங்குகிறது: பல எதிர்ப்பார்ப்புகள் நிறைந்துள்ளன
ராம் குமார் (Author) Published Date : Jun 28, 2019 15:00 ISTஇந்தியா
அமேசான் இந்தியாவின் மூன்றாவது ப்ரைம் தினம் ஜூலை 15 மற்றும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 48 மணிநேர நீண்ட திருவிழாவில் அமேசான் தனது தளங்களில் பல சலுகைகளும் மற்றும் தள்ளுபடிகளும் வழங்கவுள்ளது. மேலும் ப்ரைம் வீடியோ மற்றும் ப்ரைம் மியூசிக் பயன்பாடுகளில் புதிய திரைப்படங்கள் மற்றும் பாடல்களையும் வெளியிட உள்ளது.
அமேசான் ப்ரைம் விற்பனை ஜூலை 15 ஆம் தேதி நள்ளிரவு12 மணிக்கு தொடங்கி ஜூலை 16 அன்று இரவு 11:59 மணி வரை நடைபெறும். அமேசான் பிரைம் உறுப்பினர்கள் எச்டிஎப்சி வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவோருக்கு உடனடியாக 10% தள்ளுபடி வழங்குகிறது.
மேலும் அமேசான் பே, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குவோருக்கு வரம்பற்ற வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும். கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஈ.எம்.ஐ கார்டுகளில் வாங்குவோருக்கு செலவு ஈ.எம்.ஐ இல்லாமல் சலுகைகள் வழங்குகின்றனர்.
அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் அமேசான்.இன் வழியாக உள்நாட்டு விமான முன்பதிவுகளை அமேசான் பேவிலிருந்து செய்பவர்களுக்கு ரூபாய் 2,500 வரை கேஷ்பேக் பெற வாய்ப்புகள் உள்ளன. இதனை தவிர, பிரபலமான பயன்பாடுகளான யாத்ரா, பாக்ஸ் 8, ஈஸி டைனர் மற்றும் மெட்லைஃப் ஆகியவற்றுடன் அமேசான் பேவைப் பயன்படுத்தும்போது அமேசான் நிறுவனம் ரூபாய் 850 வரை கேஷ்பேக்குகளை வழங்குகிறது.
மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ப்ரைம் தினத்தன்று சலுகை விலையில் கிடைக்கப்பெறும். ஒன்பிளஸ் 7, 7 ப்ரோ மற்றும் 6 டி, சாம்சங் எம் 40 மற்றும் ஒப்போ எஃப் 11 புரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் கவரும் படியான தள்ளுபடியில் வழங்கவுள்ளனர். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எல்ஜி டபிள்யூ-சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனை பிரைம் டே விற்பனையின் போது தொடங்க உள்ளது.
ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் எக்கோ சாதனங்கள் உள்ளிட்டவை தள்ளுபடி விலையில் அமேசான் தளத்தில் பெற இயலும். விர்ச்சுவல் ரியாலிட்டி சாவடிகள் மின்னணு வர்த்தக தளத்தில் அமைக்கவுள்ளனர். வி.ஆரில் சிறந்த பிராண்டுகளிலிருந்து இருந்து வரும் புதிய தயாரிப்பு அறிமுகங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுபவிக்க உதவுகின்றது. டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, புனே மற்றும் கொல்கத்தாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மால்களில் வி.ஆர் சாவடிகள் ஜூலை 6, 2019 முதல் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.