+2 பொது தேர்வு முடிவுகள் 2019: 91 சதவீதம் தேர்ச்சி, திருப்பூர் மாநிலம் முன்னிலை
ராம் குமார் (Author) Published Date : Apr 19, 2019 05:30 ISTஇந்தியா
தமிழக அரசு மேல்நிலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மாநிலத்தில் 91.3 சதவீத தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 91.1 சதவீதத்தை விட முன்னேற்றம் கண்டுள்ளது. மார்ச் மாதம் தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் தேர்வு முடிவுக்காக ஆவலோடு காத்திருந்த நிலையில், பள்ளி கல்வித்துறை தங்கள் இணையத்தளத்தில் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மார்ச் 19 ம் தேதி முடிவடைந்த மேல்நிலை தேர்வை கிட்டத்தட்ட 8.69 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார். அதில் திருப்பூர் மாநிலம் வழக்காமாக முன்னிலை பெரும் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தேர்ச்சி சதவீதத்தில் முதல் இடத்தை கைப்பற்றியது. திருப்பூர் 95.37% தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்தது. ஈரோடு, பெரம்பலூர் ஆகியவை முறையே 95.23% மற்றும் 95.15% பதிவு செய்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தது
வழக்கம்போல் மாணவிகள் 93.64% தேர்ச்சி சதவீதம் பெற்று மாணவர்களை விட சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்தனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.57 சதவிகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் 84.76% தேர்ச்சி பெற்றன, மேலும் தனியார் பள்ளிகள் 98.2% தேர்ச்சி பெற்று நல்ல ஒரு வளர்ச்சியை காட்டியுள்ளது.
இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தேர்வு முறையில், மாணவர்கள் இரண்டரை மணி நேரம் 100 மதிப்பெண்களுக்கான தேர்வு எழுதினர். மொழி மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களை பொறுத்தவரை, அவர்கள் இரு தனி பாடங்களுக்கு பதிலாக ஒருங்கிணைந்த ஒற்றைத்தேர்வை எழுதினர். மாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்க முதல் மதிப்பெண்களை பெரும் மாணவ மாணவிகளின் பெயரை அறிவிக்கும் நடைமுறையை தவிர்க்க முடிவு செய்துள்ளது மாநில கல்வித் துறை.
+2 தேர்வு முடிவுகளை காண TN HSC Results 2019 இணயதளத்தை காண்க.