பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது
ராம் குமார் (Author) Published Date : Apr 29, 2019 14:14 ISTஇந்தியா
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் நடைபெற்றது. 12 ஆயிரத்து 546 மாணவ மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனி தேர்வாளர்களும் தேர்வு எழுதினார். மாநில தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணியளவில் வெளியிடப்பட்டது. தேர்வுகள் மார்ச் மாதம் 14 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in http://tnresults.nic.in/stet.htm என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் மொத்தம் 9 .76 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வுகளை சந்தித்தனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 95.2 ஆகவும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93 .3 ஆகவும் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 97 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்ச்சி சதவீதத்தில் மாவட்ட வாரியாக 98.53 வீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதல் இடத்திலும் ராமநாதபுரம் 98.48 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்திலும் 98.45 சதவீதம் பெற்று நாமக்கல் மாவட்டம் மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றது. குறைத்த தேர்ச்சி வீதமாக திருவள்ளூர் மாவட்டம் இடம்பெற்றது.
மேலும் பாட வாரியாக தேர்ச்சி சதவீதத்தை கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. மொழி பாட தேர்ச்சி 96.12 ஆகவும், ஆங்கிலத்தில் 97.35 ஆகவும், கணிதத்தில் 96.46 ஆகவும், அறிவியல் பாடத்தில் 98.56 சதவீதமாகவும் , சமூக அறிவியல் பாடத்தில் 97.07 ஆகவும் கணக்கிட்டு வெளியிடப்பட்டது. 6100 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.