தினமும் தயிர் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்
புருசோத்தமன் (Author) Published Date : Nov 14, 2019 14:45 ISTஆரோக்கியம்
தினமும் தயிர் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்: புகை பழக்கத்தினால் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் பலரும் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல்வேறு மருத்துவ ஆய்வுகள் அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டு இருக்கிறது. புகை பழக்கத்தை விடாமல் இருக்கும் வரை எந்த ஒரு பயனும் இல்லை.
சமீபத்தில் நடந்த புற்றுநோய் ஆய்வில், தயிர் மற்றும் நார்ச்சத்து வகை உணவுவை உட்கொள்ளும் நபர்களுக்கு, நுரையீரல் புற்றுநோயில் இருந்து குணமடைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்து உள்ளனர். இந்த மருத்துவ ஆய்விற்காக, அமேரிக்கா ,லண்டன் மற்றும் சில ஆசியா நாடுகளில் இருந்து பத்து லட்சத்திற்கு மேற்பட்ட நபர்களிடம் , தினமும் தயிர் மற்றும் நார்ச்சத்து வகை உணவுகளை உன்ன வைத்து சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவு படி,33 சதவீதம் நபருக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கம் குறைந்துள்ளதாகவும், தயிர் மற்றும் நார்ச்சத்து வகை உணவுகளை மிக குரைவாக எடுத்து கொண்டவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு குறையவில்லை என்று கண்டறிந்துள்ளனர்.
நவம்பர் மாதம் நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக இருப்பதால், மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் அனைவர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.