Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

இதய நோய்: பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டால் ஆபத்து

பதப்படுத்தப்பட்ட உணவு

இதய நோய்: பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டால் ஆபத்து: நீங்கள் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுபவரா? அப்படி சாப்பிடுவது, இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்களின் உறுதியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் 2019 "American Heart Association Scientific Sessions 2019" , வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பிலடெல்பியாவில் "Philadelphia" நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மருத்துவர் ஜெபெங் ஜாங் "Zefeng Zhang " தனது ஆராய்ச்சியில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டால் கண்டிப்பாக இதயத்திற்கு ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பல்வேறு கணக்கெடுப்பின் மூலம் தகவுள்களை சேகரித்துக்கொண்டு இருக்கும், இந்த தகவுள்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும்.

அந்த வகையில், 2011 - 2016 க்கு இடையில் தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தேர்வுக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட ஏராளமான தகவுள்களை கொண்டு, ஆராய்ச்சியாளர் ஜெபெங் ஜாங் "Zefeng Zhang " தனது இதய நோய்க்கான ஆய்வின் முடிவுகளை தயார் செய்துள்ளார்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றால் என்ன? நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தைச் சேர்ந்த ஆரம்ப ஆய்வு ஆராய்ச்சியாளர் ஜெபெங் ஜாங் கருத்துப்படி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பது, உணவு பொருட்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவை.

இது கொழுப்புகள், மாவுச்சத்துக்கள், கூடுதலாக கூட்டப்பட்ட  சர்க்கரை போன்றவற்றிலிருந்து வரும். மேலும் இந்த வகை உணவுகள் சுவையாக இருப்பதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட சுவை மற்றும் வண்ணங்கள் சேர்க்க படுகிறது.

ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது? ஆராய்ச்சியாளர்கள் 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 13,446 பெரியவர்களிடமிருந்து 24 மணிநேர உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் அவர்களின் இதய ஆரோக்கியம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இதன்படி, பதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து எடுக்கப்பட்ட 70% மற்றும் 40% கலோரிகளை சாப்பிட்டவர்களை ஒப்பிடுகையில்,  70% கலோரிகளை சாப்பிட்டவர்களுக்கு இதய நோய் அதிகம் வர வாய்ப்புள்ளதாக கண்டறிந்துள்ளனர். 

இதய நோய்: பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டால் ஆபத்து