பால்வினை தொற்று நோய் அமெரிக்காவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
புருசோத்தமன் (Author) Published Date : Oct 13, 2019 12:24 ISTஆரோக்கியம்
வளர்ச்சி அடைந்த நாடான அமெரிக்காவில், பால்வினை தொற்று நோய்கள் வருடா வருடம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது என அட்லாண்டாவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மையம் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆய்வு அறிக்கை படி, 1991 ஆண்டில் இருந்து எடுத்த புள்ளிவிவரங்கள் சார்ந்த கணக்கெடுப்பில், 2018 ஆண்டு வரை "கிளமிடியா" , "சிபிலிஸ்" மற்றும் "கொணோறியா" பால்வினை நோய்கள் அதிகரித்து கொண்டே இருந்திருக்கிறது.
இந்த வகையான பால்வினை நோய்களில் குறிப்பாக "சிபிலிஸ்" வகை நோய் 2017 ஆண்டில் இருந்து 40 சதவிதம் அதிகரித்து உள்ளது. சிபிலிஸ் வகை பால்வினை நோய் தாயின் கருவில் உருவாகும் குழந்தைகளுக்கு தொப்புள் கொடி மூலமாக பரவும் வகை.
குறிப்பாக, ஒரு பெண்மணி ஏற்கனவே பால்வினை நோயால் பாதிப்படைந்து இருந்தால், இந்த நோய் கருவுற்ற பின், கருவில் வளரும் குழந்தைக்கும் இந்த நோய் பரவும்.
இந்த நோய்யை கருவில் இருக்கும் குழந்தைக்கு வராமல் தடுக்க பல்வேறு மருத்துவ உதவிகள் இருக்கிறது, சரியான முறையில் நோயுற்ற தாய்மார்கள், மருத்துவரின் அறிவுரைப்படி செயல்பட்டால், குழந்தைகளை பால்வினை நோயில் இருந்து காப்பாற்ற முடியும்.
பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக்கொள்வதும் மற்றும் ஒழுங்காக சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பதனால், இந்த வகை பால்வினை தொற்ற நோய்கள் அமெரிக்காவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.