குறைந்த அளவில் புகை பிடிப்பதும் நுரையீரலுக்கு கேடு அமெரிக்கா ஆய்வின் தகவல்
புருசோத்தமன் (Author) Published Date : Oct 11, 2019 23:14 ISTஆரோக்கியம்
பாதுகாப்பான புகை பிடிக்கும் பழக்கம் என்பது என்று சிலர் நினைத்து, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரெட்கள் புகைப்பார்கள். இந்த வகை புகைபிடித்தல் பாதுகாப்பானது இல்லை என்று கொலம்பியா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.
சிலர் புகை பழக்கத்திற்கு அடிமையாகி, ஒரு நாளைக்கு 20 முதல் 30 சிகரெட்கள் புகைப்பார்கள். இவர்கள் இப்பழக்கத்தை கைவிட சிகரெட்டின் எண்ணிக்கையை குறைத்து கொண்டால் நுரையீரலுக்கு நல்லது என்று நினைப்பது வழக்கம். ஆனால் இதில் எந்த ஒரு பயனும் இல்லை என்பதே அறிக்கையின் முடிவு.
இந்த ஆய்விற்க்காக சுமார் 25,000 நபர்களுக்கு மேல், புகை பழக்கம் உள்ளவர்கள், குறைந்த அளவில் புகைப்பவர்கள், புகை பழக்கத்தை விட்டவர்கள் என 17 வயது முதல் 93 வயது உள்ளவர்களை வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் , நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளாவதை தடுக்க முடியவில்லை.
இந்த ஆராய்ச்சியின் ஒரு முடிவின் அறிவிப்பாக, புகை பழக்கத்தினால் பாதிப்படைந்த நுரையீரல், முழுவதுமாக நல்ல நிலைமைக்கு திரும்ப குறைந்தது 30 வருடம் ஆகும் என தெரிவிக்க பட்டுள்ளது. இதற்கு முற்றிலுமாக புகை பழக்கத்தை கைவிட வேண்டும்.