வானவில் உணவு: பல நிறப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள்
ராம் குமார் (Author) Published Date : Jun 04, 2019 10:31 ISTஆரோக்கியம்
வானவில் உண்பது எவ்வாறு? வானவில் உணவுகள் என்பது பல நிறங்களை உடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதாகும்.
நாம் சில வகை உணவுகளை எடுத்துக்கொள்ள ஆசைப்படுவோம் மேலும் அவ்வுணவை உட்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவோம். அது நடைமுறைப்படுத்த எளிதாக இருக்கம். ஆனால் உண்மை என்னவென்றால்: வித வித உணவுகளால் நம் உடலுக்கு பயன் அளிக்கின்றது. உகந்த ஆரோக்கியத்திற்காக நமக்கு சத்துக்கள் மற்றும் நிறங்களின் உடைய பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்.
உண்மையில், பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோகெமிக்கல்களின் போன்ற பல்வேறு வகையான சத்துகள் நிறைந்து உள்ளன. மகத்தான சத்துகள் நிறைந்துள்ளதால் பல நோய்களை குணப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது. பன்முகத்தன்மையை கொண்ட வண்ணமயமான உணவுகள் சாப்பிடுவதால், உடலின் செழிப்பான வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களின் முழுமையாக பெற எளிய வழியாக உள்ளது.
வானவில் நிறங்களை உடைய பழங்களை உண்பதால் குழந்தைகளுக்கு மட்டும் இல்லாது பெரியவர்களுக்கும் உடல் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஒவ்வொரு நிறமும் குறிப்பிட்ட பைடோனுற்றியென்ட்ஸுகளால் ஏற்படுகிறது. இது கிருமிகள்,பூச்சிகள், சூரியன் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்கள் இருந்து தாவரங்கள் பாதுகாக்க உதவும் இயற்கையான இரசாயனங்கள் ஆகும்.
உணவின் நிறம் அதன் ஊட்டச்சத்து பற்றி காண்போம் மேலும் நமது உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு பைடோனுற்றியென்ட்ஸ் தரும் வனங்கள் எவ்வாறு உதவுகின்றது என்பதனையும் அறியலாம்.
சிகப்பு நிற உணவுகளின் பயன்கள்:
சிகப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் லைகோபீன் மற்றும் ஏலஜினிக் அமிலம் நிறைந்துள்ளது. ஆய்வுகளின் படி இந்நிற சத்துக்கள் புற்றுநோய் மற்றும் அந்த விளைவுகளை எதிர்த்து போரிடுகின்றது. மேலும் இதர ஆரோக்கிய நன்மைகளையும் செய்கின்றது.
தினமும் தக்காளி எடுத்து கொள்வதால் அதிலுள்ள நிற சத்துக்கள் புரோஸ்டேட் புற்றுநோயை வளர விடாமல் தடுக்கின்றது. தக்காளி விட தர்பூசணியில் லைகோபீன் அதிகமாக உள்ளது, மேலும் லைகோபீன் உடலுக்கு நன்மையை விளைவிக்கின்றது. மேலும் தர்ப்பூசணியில் உள்ள சீட்ற்றுலைன் என்ற சத்து கொண்டு ஆண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஸ்ட்ராபெர்ரி உணவு குழாய் புற்றுநோயை வளர விடாமல் தடை செய்கின்றது.
நிற சத்துகளை தனியாக மாத்திரை வடிவில் எடுத்து கொள்வது மேலும் பல இன்னல்களை உருவாக்கும். எனவே மாத்திரை வடிவு அல்லாது நேரடியாகவே சிகப்பு நிற உணவுகளை உண்பது சிறந்தது ஆகும்.
சிகப்பு நிற உணவுகள்: தக்காளி, ஆப்பிள், மாதுளை, செர்ரி, திராட்சை, குடை மிளகாய், கிரான்பெர்ரி, பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, தர்ப்பூசணி ஆகும்.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற உணவுகள் பயன்கள்:
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் உட்பட கரோட்டினாய்டுகளில் நிறைந்துள்ளன. சில கரோட்டினாய்டுகள், குறிப்பாக பீட்டா கரோட்டின், உடலில் உள்ள வைட்டமின் எ ஆக மாறுகின்றன. இது ஆரோக்கியமான பார்வை மற்றும் செல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
சிட்ரஸ் பழங்கள் ஹஸ்பெரிடின் என்று அழைக்கப்படும் தனிப்பட்ட பைட்டோனுயூட்ரினைக் கொண்டிருக்கின்றன, இது இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது. தினமும் ஆரஞ்சு சாப்பிடுவது கை கால்கள் குளிர்ச்சி அடைவது குறைத்து கைகள் மற்றும் கால்களை சூடாக வைத்திருக்க உதவும். மிக முக்கியமாக, சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால் ஸ்ட்ரோக்ஸ் வராமல் தடுக்க இயலும்.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற உணவுகள்: ஆரஞ்சு, எலுமிச்சை, கேரட், பப்பாளி, சோள கருது, மாம்பழம், அன்னாசி பழம், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற குடைமிளகாய், சர்க்கரை கிழங்குகள் மற்றும் பல ஆகும்.
பச்சை நிற உணவுகளின் பயன்கள்:
பச்சை வகை உணவுகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். பச்சை நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் லுடீன், ஐசோதையோசியன்டேஸ், ஐசோபிளவோன்ஸ் மற்றும் வைட்டமின் கே உள்ளது. இவை அனைத்தும் ரத்தம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. மேலும் போலேட் என்னும் சத்து அதிகமாக காணப்படுகின்றது. போலேட் பெண்களின் கர்ப்ப காலத்தில் எந்த வித சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க உதவுகின்றது.
குறுக்குவெட்டுகள் கொண்ட காய்கறிகளான ப்ரோக்கோலி நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கப் பயன்படுகின்றது. அதே சமயம் களை போன்ற இருண்ட பச்சை நிற கீரைகள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. கிவி போன்ற பழங்கள் தூக்கமின்மை, சளி, குடல் பிரச்சனைகள் போன்றவைக்கு தீர்வாக உள்ளது. மேலும் உடலில் உள்ள டிஎன்ஏவை சேரி செய்யும் ஆற்றலும் கொண்டுள்ளது.
பச்சை நிற உணவுகள்: ப்ரோக்கோலி, பீன்ஸ், பட்டாணி, பச்சை ஆப்பிள், பச்சை திராட்சை, கிவி, அவகோடா, ஸுச்சினி, கீரை வகைகள் மற்றும் பல.
நீலம் மற்றும் ஊதா நிற உணவுகளின் பயன்கள்:
நீல மற்றும் ஊதா பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆந்தோசியன்ஸ் மற்றும் ரெஸ்வெரட்ரோல் உள்ளிட்ட பைட்டோனுயூட்ரின்களில் நிறைந்திருக்கும், மேலும் அவை புற்றுநோய்க்கான எதிர்ப்பு மற்றும் வயது முதிர்ச்சி எதிர்ப்பு போன்ற பண்புகளுக்கு விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ஆய்வுகள் பெர்ரிகளில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆக்ஸிடேடிவ் அழுத்தம் மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து தீர்வு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.சிகப்பு முட்டைகோஸ், ஊதா நிறத்தில் உள்ளன. அவற்றில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் காணப்படுகின்றன.
நீலம் மற்றும் ஊதா நிற உணவுகள்: ப்ளுபெர்ரி, ப்ளாக்பெர்ரி, கத்திரிக்காய் பிளம்ஸ், சிகப்பு முட்டைகோஸ், கருப்பு திராட்சை, பிக் மற்றும் பல.
வெள்ளை மற்றும் பழுப்பு நிற உணவுகளின் பயன்கள்:
வெள்ளை ஈர்க்க கூடிய நிறமாக இல்லாவிட்டாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து உள்ளன. காலிஃளாரில் சல்ஃபோராபேன் என்று அழைக்கப்படும் ஒரு புற்றுநோய் எதிர்ப்பு கலவைகளில் நிறைந்த காய்கறி ஆகும். பூண்டு மற்றும் வெங்காயங்களில் சக்திவாய்ந்த புற்றுநோய்-சண்டை கலவைகள் அல்லிசின் மற்றும் குசேர்ட்டின் கொண்டுள்ளன. வெள்ளை காளான்களில் உள்ள நிற சத்துக்கள் மார்பக புற்றுநோயை வளர விடாமல் தடுக்கின்றன.
வெள்ளை மற்றும் பழுப்பு நிற உணவுகள்: காளிபிலோவேர், வெங்காயம், பூண்டு, காளான், உருளை கிழங்கு மற்றும் பல.
வானவில் உணவுகளை தினமும் காலை வேலையில் அல்லது மதிய வேலையில் எடுத்து கொள்வது உடலுக்கு நலனை அளிக்கும். பதப்படுத்தப்பட்ட மற்றும் தயார் நிலை உணவுகளை சாப்பிடுவதை காட்டிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் கலவைகளை உண்பது உத்தமம்.