ads
நுரையீரல் புற்றுநோயை கண்டறிய கூகுல் வளர்த்த புதிய தொழில்நுட்பம்
ராம் குமார் (Author) Published Date : May 21, 2019 21:03 ISTஆரோக்கியம்
நுரையீரல் புற்றுநோய்: அறிந்து கொள்ள கணக்கிடப்பட்ட ஸ்கேனில் இருந்து துல்லியமாக கண்டுபிடிப்பதற்காக கூகுல் ஆய்வாளர்கள் குழு ஒரு ஆழமான கற்றல் வழிமுறையைப் பயன்படுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோய் அறிந்து கொள்ள உதவும் வகையில் துல்லியத்தன்மை மற்றும் நிலைத்தன்மையையும் அதிகரிக்க செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) வேலைப்பாடுகள் நடைபெற்றன.
நுரையீரல் புற்று நோய் உலகளாவிய அனைத்து புற்றுநோய்களிலும் மிகக் கொடூரமானது. மார்பக, புரோஸ்டேட், மற்றும் கோலரெகால் புற்றுநோய்கள் ஆகியவவை ஒன்று கூடி வந்தாலும் அதனை காட்டிலும் நுரையீரல் புற்றுநோய் கொடியது ஆகும். உலகளாவிய இறப்புக்கு ஆறாவது மிகப் பொதுவான காரணியாக நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.
தொழில் பங்குதாரர்களிடம் (வடமேற்கு பல்கலைக்கழகம் உட்பட) இருந்து தரவுத்தளங்களுடன் 3D மாதிரியின் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, நுரையீரல் புற்றுநோயின் கணிப்பு மற்றும் எதிர்கால மருத்துவ பரிசோதனைக்கான அடிப்படையை அமைத்துள்ளது என கூகுல் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர் ஷ்ரவ்யா ஷெட்டி கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக நுரையீரல் புற்றுநோயின் புற்றுநோயியல் கணிப்பை (3D தொகுதி பார்வையில்) மட்டும் அடையாளம் காணாமல் நுரையீரல்களில் உள்ள நுட்பமான புற்றுநோயையும் (நுரையீரல் நொதில்கள்) அடையாளம் காணக்கூடிய ஒரு மாதிரியை கூகுல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆராய்ச்சியில், கூகுல் செயல் 45,856 மார்பு சிடி ஆய்விற்கு ஆட்கொள்ளப்பட்டது. அவற்றில் சில புற்றுநோய்களும் கண்டறிப்பப்பட்டன.
ஆய்வுக்கு ஒரு ஒற்றை சிடி ஸ்கேன் பயன்படுத்தும் போது, கூகுல் தயரித்த மாதிரி ஆறு கதிர்வீச்சாளர்களை விட சமமாக அல்லது சிறப்பாக செயல்பட்டது. பொய்யான- உண்மை பரீட்சைகளை 11 சதவீதத்திற்கும் மேலாக குறைத்துள்ளோம் என வேறல்லாத கதிரியக்க வல்லுநர்களிடம் ஒப்பிட்டு கூகுல் நிறுவனம் அறிவித்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படாத ஒரு நோயாளிகளுக்கு, கூகுல் கண்டுபிடித்த முறைமை பயன்படுத்தி நுணுக்கமான நுரையீரல் புற்றுநோயை மதிப்பாய்வு செய்து கண்டுபிடித்தது. முன்பு அந்த நோயாளிக்கு சாதாரணமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஆரம்ப முடிவுகள் உற்சாகமளிக்கின்றன, ஆனால் மருத்துவ நடைமுறையில் தாக்கம் மற்றும் பயன்பாடு குறித்து மேலும் ஆய்வுகள் மதிப்பீடு செய்யப்படும் என்று கூகுல் கூறியுள்ளது. ஆராய்ச்சி நேச்சர் மெடிசின் என்ற இதழில் வெளியிடப்பட்டது.