எச்.ஐ.வி தொற்று நோய் இருந்தால் இதய மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்
புருசோத்தமன் (Author) Published Date : Nov 17, 2019 12:57 ISTஆரோக்கியம்
எச்.ஐ.வி தொற்று நோய் இருந்தால் இதய மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்
எச்.ஐ.வி தொற்று நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர் அமீர் ஹெராவி, நவம்பர் 11 ஆம் தேதி 2019, தனது புதிய மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரிய படுத்தியுளளார்.
இந்த ஆய்வின் முக்கிய குறிப்புக்கள்
- எச்.ஐ.வி தொற்று நோய் உள்ளவர்கள் சரியான முறையில் சிகிச்சை எடுக்க வேண்டும்
- கட்டுப்பாடான சாப்பாட்டு முறையை பின்பற்ற வேண்டும்.
- சரியான முறையில் உடற்பயிற்சி செய்து உடல் வலிமையாக இருக்க வேண்டும்.
- புகை பிடிக்கும் பழக்கம் எச்.ஐ.வி தொற்று நோய் உள்ளவர்களை விரைவில் பலவீனமாக்கும்
- சக்கரை நோயாளிகள் எச்.ஐ.வி தொற்று நோயால் இருந்தால், மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
இந்த ஆய்விற்காக அமீர் ஹெராவி கடைபிடித்த முறை, குறிப்பாக, எச்.ஐ.வி தொற்று இல்லாத 534 ஆண்களிடமிருந்தும், எச்.ஐ.வி தொற்று உடன் வாழும் 589 ஆண்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்ட மருத்துவத் தகவல்களில் அவர்கள் கவனம் செலுத்தினர், அவர்களில் 83% பேர் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையின் விளைவாக அவர்களின் இரத்தத்தில் வைரஸின் கண்டறிய முடியாத அளவைக் கொண்டிருந்தனர்.
இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட ஆண்களில் 61% பேர் வெள்ளைக்காரர்களாகவும், 25% ஆப்பிரிக்க அமெரிக்கர்களாகவும், 14% பேர் ஹிஸ்பானிக் சேர்ந்தவர்கள்.
ஆராய்ச்சிக்காக சராசரியாக 57 வயதுடையவர்கள், எச்.ஐ.வி நோயாளிகள் சுமார் 13 ஆண்டுகளாக இந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.