உங்கள் உணவில் மிளகாய் சேர்த்துக்கொண்டால் மாரடைப்பு அபாயத்தை 40 சதவீதம் குறைக்கலாம்
கார்த்திக் (Author) Published Date : Dec 17, 2019 16:49 ISTஆரோக்கியம்
உங்கள் உணவில் மிளகாய் சேர்த்துக்கொண்டால் மாரடைப்பு அபாயத்தை 40 சதவீதம் குறைக்கலாம்: மிளகாய் சாப்பிடுவது கடினமாக இருக்கும், ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஒரு புதிய இத்தாலிய நாட்டில் நடந்த ஒரு மருத்துவ ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
டிசம்பர் 16 அன்று, அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஆய்வு, மிளகாய் சாப்பிடுவதால் இறப்பு விகிதத்தை எட்டு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இது பக்கவாதம் அபாயத்தை பாதியாகவும், மாரடைப்பு அபாயத்தை 40% ஆகவும் குறைக்கிறது.
மரியலவுரா பொனாசியோ வெளியிடப்பட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஆவார். இவரிடம் மிளகாய் அதிகமாக உண்ணலாமா என்ற கேள்விக்கு, அது மிகவும் தவறான வழிமுறை என்றும், உணவை எப்போழுதும் மருந்தாக எண்ணி உண்ண கூடாது. நீங்கள் மிளகையை அண்டராட சமையலில் சேர்க்கும் அளவிலேயே சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள், 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மோலி-சானி ஆய்வில் இருந்து 22,811 ஆண்கள் மற்றும் பெண்களின் தகவுள்களை பயன்படுத்தினர், இதில் தெற்கு இத்தாலியில் மோலிஸ் பகுதியில் இருப்பவர்கள்.