தலை முடிக்கு அடிக்கும் ஹேர் டை மூலம் கேன்சர் வரும் அபாயம்
புருசோத்தமன் (Author) Published Date : Dec 06, 2019 13:08 ISTஆரோக்கியம்
தலை முடிக்கு அடிக்கும் ஹேர் டை மூலம் கேன்சர் வரும் அபாயம் : இப்போது உள்ள மக்களில் அனைத்து வயதினருக்கும், தலை முடிக்கு ஹேர் டை மற்றும் முடி நேராக்குதல் செய்து கொள்வது மிகவும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது.
இது போன்ற செயல்கள், குழந்தைகளையும் விட்டுவிடவில்லை, இவர்களும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஒரு சில பள்ளிகளில் உள்ள விதிகள் இவற்றிக்கு அனுமதி தரவில்லை. இந்த வகை பள்ளிகளில் மட்டுமே குழந்தைகள் தங்களது தலை முடிக்கு எனதயும் செய்துகொள்வதில்லை.
முடி வண்ணங்கள் பொதுவாக இரசாயனங்கள் கலந்தவை, பல தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு தரத்தில், விலை குறைவாகவும், விலை அதிகமாகவும் தரத்திற்கேற்ப விற்பனை செய்கிறார்கள். சில நிறுவனங்கள் குறைந்த விலையில் தரம் இல்லாத ஹேர் டை விற்பனை செய்கிறார்கள்.
அமெரிக்காவில் நடந்த மருத்துவ ஆய்வில், தலை முடிக்கு ஹேர் டை பயன்படுத்துவோருக்கு மார்பக புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாகவே உள்ளது. இந்த ஆய்வு சர்வதேச புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் குழு, "சகோதரி ஆய்வு" "Sister Study" என்றழைக்கப்படும் ஒரு ஆய்வின் தரவை பகுப்பாய்வு செய்து, 35 முதல் 74 வயதுக்குட்பட்ட பெண்களிடமிருந்து மருத்துவ பதிவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆய்வுகள் குறித்து ஆய்வு செய்தது.
சகோதரி ஆய்வில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ஏற்கனவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரி இருந்ததால் மார்பக புற்றுநோய்க்கு அதிக வாய்ப்பு உள்ளது தெரிகிறது. தலைமுடி சாயங்கள் மற்றும் நேராக்குவது பற்றிய கேள்விகளுக்கு பெண்கள் பதிலளித்தனர், மேலும் இதில் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களும் அடங்குவர்.
நிரந்தர முடி சாயம் அல்லது கெமிக்கல் மூலம் தலை முடியை நேராக்கும் பெண்கள் அதிக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆய்வின் முடிவு காட்டுகிறது.
மார்பக புற்றுநோய்க்கான ஆய்வை பற்றி கூறிய தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான தொற்றுநோய் நிபுணர் அலெக்ஸாண்ட்ரா வைட் கூறுகையில், “கறுப்பின பெண்களிடையே இந்த புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது.
நிரந்தர முடி சாயங்களை தவறாமல் பயன்படுத்தும் பெண்கள் 9 சதவிகிதம் மார்பக புற்றுநோயைப் பயன்படுத்தாத பெண்களுடன் ஒப்பிடும்போது அதிக வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். மேலும் தலைமுடியை கெமிக்கல் மூலம் நேராக்குபவர்களுக்கு 18 சதவீதம் அதிகரிக்க அதிகம் உள்ளது.
சுமார் 5000 வகையான இரசாயனங்கள் ஹேர் டையில் உள்ளன, அதில் எந்த வகையான இரசாயனங்கள் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருளாக இருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உறுதிப்படுத்த இன்னும் கூடுதலான ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மார்பக புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் பல விஷயங்களை உணவு மற்றும் இரசாயனங்கள் மூலமாகவும் பெண்கள் உபயோகிக்கும் பொருட்களில் இருக்கிறது, அதில் எது ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டறிய வாய்ப்பில்லை.
முடிந்த வரை, மார்பக புற்றுநோய் வராமல் இருக்க பெண்கள் கவனமாக செயல்படுவது முக்கியம்.