வால்டர் தமிழ் படம் (2020) எந்த மாதிரியான படம்
புருசோத்தமன் (Author) Published Date : Mar 10, 2020 23:17 ISTபொழுதுபோக்கு
வால்டர் தமிழ் (2020) எந்த மாதிரியான படம்: வால்டர் படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம், சமூக பிரச்சனைகள் தெளிவாக எடுத்துக்காட்டும் படம் வால்டர். சிபி சத்யராஜ் போலீஸ் ஐ பி ஸ் அதிகாரியாக இதில் நடித்துள்ளார். தமிழ் நாட்டில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் அதில் இருக்கும் குற்ற பின்னணி பற்றிய கதை.
பல படங்களில் மருத்துவமனைகளில் நடக்கும் தவறுகள், உணவு சுகாதாரம், உடல் உறுப்பு கடத்தல், சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் என பல படங்களை பார்த்துள்ளோம். அந்த வரிசையில் வரும் மற்றொரு படம் தான் வால்டர்.
பெரும்பாலுமான சமூக பிரச்சனைகள் உள்ள கதை திரைப்படங்கள் நல்ல திரைக்கதை மூலம் வெளிவருவதால், மக்களிடம் இருந்து பாராட்டுகளும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.
அந்த வகையில் வால்டர் படம் நல்ல திரைக்கதையில் வர இருக்கிறது. வால்டர் படத்தின் மைய கரு குழந்தைகளை கடத்தும் கும்பல் மற்றும், கடத்த பட்ட குழந்தைகள் அடுத்த நாள் கிடைக்கிறது ஆனால், விரைவில் இறந்து விடுகிறது.
இவ்வாறு நடக்கும் குழந்தை கடத்தலுக்கு என்ன காரணம், இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார், இவர்களை கதாநாயகன் சிபி சத்யராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார், இதனால் இவர் சந்திக்கும் சிக்கல்களை விறுவிறுப்பான கதை களத்தில் புது முக இயக்குனர் அன்பு சிறப்பாக இயக்கியுள்ளார்.