ads
விஜய் சேதுபதி சிந்துபாத் பட ரிலீஸ் தேதி மற்றும் நடிகர் விவரங்கள்
ராம் குமார் (Author) Published Date : Jun 17, 2019 18:05 ISTபொழுதுபோக்கு
Sindhubaadh Movie: விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் சிந்துபாத் படம் இந்தவார இறுதியில் உலகெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. படம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் சமீபத்தியில் வெளியான ட்ரைலர் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது, படம் முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டு கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி படங்களில் கலக்கிய அருண் குமார் விஜய் சேதுபதி கூட்டணி இணையும் மூன்றாவது படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தி கே ப்ரோடுக்ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து ரூபன் அவர்கள் எடிட் செய்யும் சிந்துபாத் ஜூன் 21 அன்று உலகெங்கும் வெளியாகிறது.
படத்தின் ட்ரைலரில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் படத்தில் சண்டை காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு ருசீகர தகவல் என்னவென்றால், நடிகர் விஜய் சேதுபதியின் மகன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நடிகர் இயக்குனர் கூட்டணி முந்தைய இருபடங்களிலும் சோபித்த நிலையில் மூன்றாவது படமும் மாபெரும் வெற்றிபெரும் என்று கோலிவுட் வட்டாரம் உறுதியாக உள்ளது.