ads

வெல்வெட் நகரம் படம் எப்படி இருக்கு, விமர்சனம்

வெல்வெட் நகரம் படம்

வெல்வெட் நகரம் படம்

வெல்வெட் நகரம் படம் ஒரு பத்திரிகை நிருபரின் ஒருவித துப்பறியும் கதை. பழங்குடி மக்களிடம் இருந்து நிலங்களை சில தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அபகரிக்க நினைக்கிறார்கள். இவர்களிடேம் அகப்பட்டவர் கொலை செய்ய படுகிறார், இதை வரலட்சுமி சரத்குமார் எப்படி கண்டிபிடிக்கிறார் என்பதே கதை.

படத்தை பார்த்தவர்களிடம் கேட்ட போது, எதிர்பார்த்த அளவிற்க்கு படம் நன்றாக இல்லை. முதல் பகுதி ரொம்ப மெதுவாக செல்கிறது, இரண்டாம் பகுதி சிறுது பரவாயில்லை, மற்றபடி இந்த வெல்வெட் நகரம் படம், பலமுறை எடுக்கப்பட்டு கதை தான் என்று மக்கள் கூறியுள்ளனர்.

வெல்வெட் நகரம் படத்தின் இயக்குனர் மனோஜ் குமாருக்கு இது முதல் படம், ஆனால் முதல் பட இயக்குனர் போல இல்லை, ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனரை போல இந்த படத்தை கையாண்டுள்ளார். படத்திற்கு இசை ஒரு முக்கிய பலம் என்று கூறலாம்.

இன்று தமிழில் அதிக படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதால், வெல்வெட் நகரம் படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. படம் சுமாராக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதால், இந்த படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைப்பது கடினம், அதிலும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இந்த படத்தை ஆன்லைனில் கசியவிட்டு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

வெல்வெட் நகரம் படம் எப்படி இருக்கு, விமர்சனம்