ads

வி தெலுங்கு பட விமர்சனம்: பழைய மசாலா கதை

வி தெலுங்கு பட விமர்சனம்

வி தெலுங்கு பட விமர்சனம்

நானி, நிவேதா தாமஸ், மற்றும் சுதீர் பாபு ஆகியோர் நடித்த வி திரைப்படம் அமேசான் பிரைம் ரிலீஸ் ஆனது, படத்தில் புதிதாக எதுவும் சொல்லவில்லை. வழக்கமான பழிவாங்கும் கதை, டோலிவுட் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட பின்னர் OTT இல் வெளியான முதல் பெரிய தெலுங்கு படம் 'வி'. நானி மற்றும் சுதிர் பாபு நடித்த மல்டி ஸ்டாரர் செப்டம்பர் 5 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படம் அதிரடி சூப்பர் ஸ்டார் நானியை இந்திய சினிமாவில் முதல் முறையாக வில்லனாக சித்தரிக்கிறது. இந்த 'வி' படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யப்படுகிறது என்று நினைத்தால், கிடையாது.

கதை: இந்த படத்தின் கதை மிகவும் கொடூரமான கொலைகளைச் செய்யும் ஒரு கொலைகாரனுக்கும் புத்திசாலித்தனமான - சக்திவாய்ந்த காவல்துறை அதிகாரிக்கும் இடையிலான நடக்கும் ஒரு விதமான போர்.

இன்ஸ்பெக்டர் பிரசாத் தனது சொந்த வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். நானி (கில்லர்) பின்னர் சுதீர் பாபுவை (ஆதித்யா) சவால் விடுகிறார், அவருக்கு துப்பு கொடுத்து, ஒன்றன்பின் ஒன்றாக ஒரு கொலை செய்கிறார்.

அவர் உண்மையில் இந்த கொலைகளை ஏன் செய்கிறார்? இந்த கொலையாளி பின்னணி என்ன? கடைசியில் ஆதித்யா கொலையாளியைப் பிடித்தாரா? வி ஸ்டோரி ஒட்டுமொத்தமாக இந்த கேள்விகளுக்கான பதில்களைக் கொண்டுவருகிறது.

விமர்சனம்: வி ஸ்டோரிலைன் ஒரு அதிரடி, பரபரப்பான முதல் பாதியில் தொடங்குகிறது மற்றும் வழக்கமான பழிவாங்கும் ஃப்ளாஷ்பேக் திரைக்கதையில் செல்கிறது. இந்த திரைக்கதை பார்வையாளரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் பின்தங்கியிருக்கிறது. 

இயக்குனர் மோகனா கிருஷ்ணா உருவாக்கிய கொலையாளி மற்றும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களும் வலிமையானவை. ஆனால், கதை பலவீனமானது. அத்தகைய சஸ்பென்ஸ் மற்றும் க்ரைம் த்ரில்லரின் முக்கிய பலம் திரைக்கதை. ஆனால் வி திரைப்படத்தில், திரைக்கதை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

திரைக்கதை வலுவாக இருந்திருந்தால், படத்தின் நிலை வேறுபட்டிருக்கும். முதல் பாதியில் சஸ்பென்ஸைத் தக்க வைத்துக் கொண்ட இயக்குனர், இரண்டாம் பகுதியை சிறப்பாக கையாளவில்லை. க்ளைமாக்ஸில் திருப்பமாக இருந்தாலும், அந்த அளவிற்கு சுவாரசியமாக இல்லை.

வி தெலுங்கு பட விமர்சனம்: பழைய மசாலா கதை