வரும் வியாழக்கிழமை முதல் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு அதிகரிக்கும் திரைகள்
விக்னேஷ் (Author) Published Date : Apr 19, 2022 15:23 ISTபொழுதுபோக்கு
கடந்த வாரம் வெளியான கே.ஜி.எஃப் 2 படம் இந்தியா முழுவதிலும் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து, இன்றும் அனைத்து திரையரங்கிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜயின் நடிப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான பீஸ்ட் படம், தமிழ் நாட்டில் அதிக திரையரங்கில் ரிலீஸ் ஆனது. கே.ஜி.எஃப் 2 படத்திற்கு குறைவான திரைகள் கிடைத்தன.
பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதலால், பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்தனர். அடுத்தநாள் கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் ஆகி முதல் காட்சி முடிந்த பிறகு, அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
கே.ஜி.எஃப் 2 மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, மக்கள் கூட்டம் பீஸ்ட் படத்திற்கு செல்வதை தவிர்த்தனர். இதனால், சில காட்சிகள் நிறையவில்லை.
இதன் காரணத்தினால், வரும் வியாழக்கிழமை முதல் பீஸ்ட் படம் ஓடும் சில இடங்களில் கே.ஜி.எஃப் 2 படம் ஓடப்படவுள்ளது. பீஸ்ட் படத்தின் வசூல் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம்.
ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன கே.ஜி.எஃப் 2 படம், ஏப்ரல் 18ஆம் தேதி திங்கட்கிழமை எண்ணிக்கையுடன், படத்தின் மொத்த இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 500 கோடி வசூல் சாதனையை படைத்துள்ளது.