ads

தி மார்க்ஸ்மேன் படம்: கோட்டை விட்டார் லியாம் நீசன்

தி மார்க்ஸ்மேன் தமிழ் படம்

தி மார்க்ஸ்மேன் தமிழ் படம்

லியாம் நீசன் நடிப்பில் ராபர்ட் லோரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தி மார்க்ஸ்மேன். நடிகர் லியாம் நீசன் அவர்களுக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகம் என்பதால் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் மொழியாக்கம் செய்து ரிலீஸ் செய்துள்ளனர்.

அதிரடி சண்டை காட்சிகளில் தனக்கான ஸ்டைலில் வெளுத்துவாங்கும் நடிகர் லியாம் நீசன், இவருக்கு வயது 68. இவர் வயதிற்கும் இவர் நடிக்கும் சண்டை காட்சிகளுக்கு வித்தியாசம் காமிக்கும் வகையில் கலக்கலாக இருக்கும்.

இந்திய மக்களை அதிகம் கவர்ந்த படம் டக்கென் (Taken 2008), தனது மகளை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்ற இவர் எடுக்கும் முயற்சி, அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் இவரது வசனங்கள் மிகவும் பிரபலம்.

இதே ஸ்டைலில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் தான் தி மார்க்ஸ்மேன். இந்த படத்தில் இவரிடம் அடைக்கலம் தேடி வரும் ஒரு சிறுவனை வில்லன்களிடம் இருந்து இவர் காப்பாற்ற இறுதிவரை போராடுகிறார்.

இது போன்று கதைகளை, ஹாலிவுட் ரசிகர்கள் பல நூறு படங்களில் பார்த்துள்ளதால், தி மார்க்ஸ்மேன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தி மார்க்ஸ்மேன் படத்தின் கதை

மெக்ஸிகோ பார்டரில் தனது மாட்டுப்பண்ணையில் வசிக்கும் வயதானவர் படத்தின் நாயகன் ஜிம் (லியாம் நீசன்). இவரது மகள் போலீஸ் அதிகாரியாக உள்ளார். இவர் பார்டர் பகுதியில் இருப்பதால், மெக்ஸிகோ நாட்டில் இருந்து திருட்டுத்தனமாக வரும் நபர்களை நாயகன் பார்டர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது வழக்கம்.

மெக்ஸிகோ நாட்டின் கடத்தல்காரர்களிடம் இருந்து ஒரு தாய் தனது சகோதரர் கொடுத்த பணத்துடன் தனது மகனுடன் பார்டர் வழியாக தப்பிக்கும் போது, கடத்தல்காரர்களிடம் மாட்டிக்கொள்ள, இவர்களை சண்டையிட்டு காப்பாற்றுகிறார் லியாம் நீசன்.

சண்டையில் குண்டடிபட்டு இறக்கும் தருவாயில் தனது மகனை சிகாகோவில் இருக்கும் தனது சகோதிரியுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார். பிறகு அந்த சிறுவனை சிக்காகோவிற்கு அழைத்து செல்லும் வழியில் கடத்தல்காரர்களிடம் போராடுகிறார்.

இறுதியில் கடத்தல்காரர்களை வென்று சிறுவனின் தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுகிறார். வழக்கம் போல் கார் சேசிங், தப்பான போலீஸ் அதிகாரிகள் கடத்தல் காரர்களுக்கு உதவுவது, விறுவிறுப்பான துப்பாக்கி சண்டை காட்சிகள் போராட்டத்தில் இடம் பெறுகின்றது.

படம் எப்படி இருக்கு என்று கேட்டால், ஏற்கனவே பல முறை இதே கதைகள் ஹாலிவுட் படங்களில் வந்துள்ளதால், ஏன் பெரிய ஹீரோக்களாக இருக்கும் லியாம் நீசன் போன்றவர்கள் இது போன்ற கதையில் நடிக்க ஆர்வம் செலுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. 

எதிர்பார்த்த அளவிற்க்கு படத்தில் சுவாரசியமாக ஒன்றும் இல்லை, பல முறை பார்த்த கார் சேசிங் சண்டைகள், புதிய முயற்சிகள் ஏதும் இல்லை. ஒருமுறையாவது பார்க்கலாம் என்ற எண்ணமும் அவசியம் இல்லை. பார்க்க வேறு படம் இல்லையெனில், தி மார்க்ஸ்மேன் படத்தை பாருங்கள் போர் அடிக்காது.

தமிழத்தில் திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று பார்த்தால், பெரிதாக ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் தி மார்க்ஸ்மேன் முழு தமிழ் படம் உயர்தர எச் டி ப்ரிண்டில் ரிலீஸ் ஆகி இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

தி மார்க்ஸ்மேன் படம்: கோட்டை விட்டார் லியாம் நீசன்

தி மார்க்ஸ்மேன் படம்: கோட்டை விட்டார் லியாம் நீசன்