தி கான்ஜுரிங்: தி டெவில் மேட் மீ டூ இட் தமிழ் படம் விமர்சனம்
ராசு (Author) Published Date : Aug 25, 2021 22:22 ISTபொழுதுபோக்கு
தி கான்ஜுரிங்: தி டெவில் மேட் மீ டூ இட், பேய்களை வேட்டையாடுவதில் கில்லாடி தம்பதிகளான எட் மற்றும் லோரெய்ன், இந்த படத்தில் பேய்களை விரட்டவில்லை என்பதே சோகம்.
பேய்களை விரட்டுவதற்கு பதிலாக, இந்த பாகத்தில், சூனியம் வைத்த நபரை விரட்டுகிறார்கள். விரட்டுகிறார்கள் என்பதை விட தேடி அலைகிறார்கள் என்பதே நிஜம். சூனியம் வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து அழிக்கிறார்களா என்பது தான் கதை.
கான்ஜுரிங் படத்தின் மற்ற பாகங்கள், மிக சிறந்த முறையில் நம்மை மிகவும் திகிலூட்டும், ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே வருத்தம்.
ட்ரைலரில் வரும் காட்சிகள், நம்மை பேய்விரட்டலுக்கு வேறு கட்டத்திற்கு எடுத்து செல்வதை உணர்ந்தோம், ஆனால் இது ஒரு சாதாரண பழக்கப்பட்ட திகில் படமாக இருக்கிறது.
ஆரம்ப காட்சியில் 8 வயதான சிறுவனுக்கு பேய்பிடித்துள்ளது, இவனை காப்பாற்ற எட் மற்றும் லோரெய்ன் தம்பதிகள் ஒரு பாதரியாருடன் இணைந்து போராடுகிறார்கள்.
வழக்கம் போல் பேய்யை ஒருகட்டத்தில் அடக்குகிறார்கள், ஆனால் பேய்யை வம்படியாக சிறுவனின் அக்காவை காதலிக்கும் இளைஞன், சிறுவனுக்கு பதிலாக தன்னை பேயிடம் அர்பணிக்கிறார், அதாவது பேய்யை தனுக்குள் வந்து சிறுவனை விட்டு விட சொல்கிறார்.
எட் மற்றும் லோரெய்ன் தம்பதிகள், இது ஒரு சாத்தானின் வேலை என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, இதற்கு காரணம் வீட்டில் வைத்திருக்கும் சூனியம் என்று தெரிய வருகிறது.
சூனியக்காரியாக வருபவர், தனக்கு அதீத சக்தி கிடைப்பதற்காக குறிப்பிட்ட மூன்று நபர்களுக்கு சூனியத்தை வைக்கிறாள். இவர்களை கொலை செய்யவும், பிறகு இவர்களாகவே தற்கொலை செய்து கொள்ள சூனியத்தினால் தூண்டப்படுகிறது.
இதில் இருந்து இவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதை ஒரு சாதாரண திகில் படத்தின் கதை போல் அமைத்துள்ளனர்.
இந்த சூனியத்தை வைத்தது யார்? எதற்காக வைத்தார்கள்? வைத்த இடம் எங்கு இருக்கிறது? என்பதை கண்டுபிடித்து அதை அளிக்கிறார்களா என்பதே கிளைமாக்ஸ்.
எட் மற்றும் லோரெய்ன் தம்பதிகள் மற்றவர்களுக்கு சூனியம் வைத்ததை கண்டுபிடிக்கும் போது, இவர்களுக்கும் சூனியம் வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடையுகிறார்கள்.
இதற்கு முன்னாடி நாம் பார்த்த காஞ்சுரிங் படத்தில், வீட்டில் இருக்கும் பேய்களை அடக்குவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், கூடவே பேயால் பாதிக்கப்பட்ட நபரின் வினோத செயல்கள் நம்மை திகிலூட்டும்.
அனால், இந்தப் படத்தில் பேய்கள் இல்லை, மிக அச்சுறுத்தும் அளவிற்கு காட்சிகளும் இல்லை, அதற்கு பதிலாக ஒரு சூனியக்காரியை அடக்குகிறார்கள்.
எதிர்பார்த்த அளவிற்க்கு திகில் காட்சிகள் இல்லை என்றாலும், படமே இல்லாத இந்த சமயத்தில், ஒரு முறை திரையரங்கில் தி கான்ஜுரிங்: தி டெவில் மேட் மீ டூ இட் பார்க்கலாம்.