கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள், மன்னிப்புக் கேட்ட தயாரிப்பாளர் விவரம் உள்ளே
கௌரிசங்கர் (Author) Published Date : May 18, 2019 16:47 ISTபொழுதுபோக்கு
சமீபத்தில் நடிகர் இளையதளபதி விஜய் ரசிகர்களின் டுவிட்டர் அக்கவுன்ட்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வந்தன. டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இளைய தளபதிக்கென பல லட்ச ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் சில முக்கியமான விசிறிகள் தளபதி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அப்படி டுவிட்டரில் பிரபலமாக இருக்கும் விஜய் ரசிகர்கள் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின்னணியில் மெர்சல் படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் இருக்கிறது என்று தளபதி ரசிகர்களால் குற்றம் சாட்டப்பட்டது.
உண்மையில் இப்படி ரசிகர்களின் டுவிட்டர் கணக்குகள் எந்த வித அறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம். இப்போதெல்லாம் எல்லா ஊடகங்களும், கலைஞர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் அவர்களது பதிப்புரிமையை வலைத்தளங்களில் வழுவாக்கி வருகின்றனர். இது கருத்து திருட்டு விவகாரத்தை போன்றது. ஒருவர் அவரது படைப்பிற்கு பதிப்புரிமையை முறைப்படி பெற்றுவிட்டால், அந்த கருத்தையோ, தகவலையோ அல்லது படைப்பு சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் உரிமை இல்லாத மற்றவர் வலைத்தளங்களிலோ அல்லது வெளியிலோ சரியான அனுமதி இன்றி பயன்படுத்த முடியாது.
அப்படி சரியான உரிமை இன்றி பதிப்புரிமை பெற்ற விஷயங்களை வலைத்தளத்தில் பதிவிட்டால் உங்கள் அக்கவுட்டிற்கு எச்சரிக்கை விடுக்கப்படும். மீண்டும் மீறுபவரின் அக்கவுட் முடக்கப்படும். இது ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற வலைத்தளங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்பொழுது டுவிட்டரிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளைய தளபதி நடித்த மெர்சல் படத்திற்கு பதிப்புரிமை வாங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம். ஆக மெர்சல் படத்தில் வரும் பாடல்களையோ, அல்லது வீடியோக்களையோ நீங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் எச்சரிக்கப்படுவிர்கள். மீறினால் உங்கள் கணக்கு முடக்கப்படும். இப்படித்தான் மெர்சல் படத்தின் வீடியோக்களை டுவிட்டரில் பதிவிட்ட விஜய் ரசிகர்களின்
கணக்குகள் முடக்கப்பட்டது. எந்த வித அறிவிப்பும் இன்றி தங்களது டுவிட்டர் அக்கவுன்ட்கள் முடக்கப்பட்டதால் மிகப்பெரிய குழப்பத்திற்கு உள்ளாகினர் தளபதி ரசிகர்கள். மேலும் மெர்சல் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான திருமதி. ஹேமா ருக்மணியை வலைத்தளங்களில் வசைபாடி வருகின்றனர் தளபதி ரசிகர்கள். இது குறித்து மனம் வருந்திய தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி விஜய் ரசிகளிடம் அவரது டுவிட்டர் அக்கவுட் வாயிலாக மன்னிப்புக் கேட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விஜய் ரசிகர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை, உண்மை ரசிகர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதை எண்ணி வருந்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.