ads
தளபதி 66 விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் வைரலானது
விக்னேஷ் (Author) Published Date : Apr 06, 2022 22:08 ISTபொழுதுபோக்கு
விஜய் தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் கோலாகலமாக தொடங்கியது. விஜய்யின் பீஸ்ட் பட ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் விஜய் சத்தமில்லாமல் "விஜய்66" படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்.
இன்று காலை படத்தின் பூஜையில் விஜய், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி, நடிகர் சரத்குமார், நாயகி ரஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் தில் ராஜு கிளப் போர்டில் அடித்து படப்பிடிப்பை தொடங்கினார்.
கோகுலம் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைத்துள்ளனர். அங்குதான் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. பத்து நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பும் இங்குதான் நடந்தது.
விஜய்யின் முந்தைய படங்களான "மாஸ்டர்", "பீஸ்ட்" ஆகிய படங்களில் ராஷ்மிகாவை ஜோடியாக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், வாய்ப்புகள் தள்ளிப்போனது.
இதற்கிடையில், இந்த முறை விஜய் படத்தை மிஸ் செய்ய விரும்பாத ராஷ்மி, "விஜய்66" படத்துக்காக தனது தேதிகளை ஒதுக்கியுள்ளார். இதில் சரத்குமார் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.