ads
தளபதி 64 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வெளியானது ருசீகர தகவல்
கௌரிசங்கர் (Author) Published Date : May 13, 2019 18:19 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இளையதளபதி விஜய் அவர்கள் அவரது 63 ஆவது பெயரிடப்படாத படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இயக்குனர் அட்லீ மூன்றாவது முறை இளையதளபதி அவர்களை இயக்கம் படம் இது. இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நீண்ட இடைவேளைக்கு பிறகு நமது இளையதளபதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கால்பந்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படம் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது. நமது இளையதளபதி இப்பொழுதும் மாறுபட்ட கதைகளத்தையும், கதாப்பாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருக்கிறார். அந்த வகையில் அவரது 63 ஆவது படம் நிச்சையம் கால்பந்தை மையமாகக்கொண்ட மாறுபட்ட கதையாக இருக்கும் என்று அவரது ரசிகர்களால் நம்பப்படுகிறது.
இந்த படத்தின் சின்ன குறுஞ்செய்தி கூட இணையத்தை கலக்கி வருவதற்கு காரணம் அந்த அளவிற்கு ரசிகர்கள் இந்த படத்தை எதிர்ப்பார்கின்றனர் என்று தானே அர்த்தம். தற்பொழுது இணையத்தை கலக்கி வரும் புதிய செய்தி என்னவென்றால் அது இளைய தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக நடிக்கப் போகும் 64 வது படத்தை பற்றியது தான். இளைய தளபதி விஜய் அவர்களை இயக்க பல முன்னணி இயக்குனர்கள் போட்டியிட்டு வருகின்றனர். தினமும் புது புது இயக்குனர்களும், பழம்பெரும் பிரபல இயக்குனர்களும் அவரிடம் கதை சொல்லி வருகின்றனர். இளைய தளபதி இதுவரை நடித்திராத மாறுபட்ட கதை உருவாக்கத்தில் நடிக்க விரும்புகிறார். அவரது ரசிகர்களும் அதைத்தான் விரும்புகின்றனர்.
ஆதலால் எப்பேர்பட்ட இயக்குனராக இருந்தாலும் அவர் எதிர்ப்பார்க்கும் கதை அம்சம் இல்லையென்றால் அந்த கதையை நிராகரித்துவிடுகிறாராம் நம் இளைய தளபதி அவர்கள். பல முன்னணி நடிகர்கள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு இளம் இயக்குனருக்கு அடித்துள்ளது அந்த மாபெரும் ஜாக்பாட். அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை “மாநகரம்” படத்தின் இயக்குனர் திரு.லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான். அவர் தற்பொழுது நடிகர் கார்த்தி அவர்களை கதாநாயகனாக வைத்து “கைதி” என்ற படத்தை இயக்கி வருகிறார். குறும்பட இயக்குனராக அறிமுகமான லோகேஷ் எப்போதும் மாறுபட்ட கதை அமைப்பைக் கொண்டு படங்களை உருவாகுவது அவரது தனித்திறமை. தற்பொழுது இளைய தளபதிக்காக அவர் எழுதிய கதை அமைப்பு விஜய் அவர்களை வெகுவாக கவர்ந்திருப்பதாகவும், அவரிடம் முழு கதை மற்றும் திரைக்கதை பற்றிய விவாதங்கள் நட்ந்துகொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி நமது இளைய தளபதி விஜய் அவர்களது பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் இந்த பிறந்தநாளை எப்போதும் போல விமர்சையாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் இந்த பிறந்தநாளுக்கு இளைய தளபதியின் 63 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் போன்ற ரூசிகர தகவல்கள் வெளியாகும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். தற்பொழுது இளைய தளபதியின் அடுத்த புதிய படத்தின் முக்கிய அறிவிப்பும் அதே நாளில் வெளியாகும் என்றும் அனைவரும் காத்திருக்கின்றனர்.