தமிழ் ராக்கர்ஸ் தேன் தமிழ் படத்தை ஆன்லைனில் கசியவிட்டுள்ளது
விக்னேஷ் (Author) Published Date : Mar 20, 2021 11:11 ISTபொழுதுபோக்கு
மிகுந்த எதிர்பார்புடன் ரிலீஸ் ஆன தமிழ் படம் தேன், மலைவாழ் கிராம மக்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமாக சித்தரித்துள்ளது இந்த படம். இந்நிலையில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இரண்டாம் காட்சிக்கு பின்பு, தேன் தமிழ் முழு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இணையத்தில் கசியவிட்டுள்ளது.
உணர்ச்சிகள் மற்றும் அன்பின் குவியலுடன் தேன் திரைப்படம் பலவிதமான விமர்சங்களை பெற்றுள்ளது. கதையுடன் நம்மை இறுக்கமாக பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர் கணேஷ் விநாயகன்.
மலைகிராம மக்களின் வாழ்கை, அவர்கள் வாழும் இயற்கை சுற்றுசூழல், அவர்களின் சடங்குகள், இவர்கள் நகர்ப்புற மக்களிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகிறார்கள், மேலும் இவர்களின் பின்தங்கிய வாழ்கை முறையால் இவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை அழகாக இயக்கியுள்ளார் இயக்குனர் கணேஷ்.
பல படங்களில் வில்லனாக நம்மை அச்சுறுத்தி இருந்தாலும், தேன் படத்தில் நடிகர் தருண்குமார் அனைவரின் உள்ளத்தையும் கவருகிறார். இவருக்கு ஜோடியாக அபர்ணதி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
மலை கிராமங்களில் வாழும் மக்கள் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும், அரசின் சலுகைகளை பெற்றிட ஆவணங்களின் முக்கியத்துவம், அரசின் மருத்துவ காப்பீடு போன்ற முக்கிய விழிபூணர்வை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் தனது காதல் மனைவிக்கு ஏற்படும் உடல்நிலை கோளாறினால், கதாநாயகன் எவ்வாறு போராடுகிறார் மேலும் இவரை போன்ற மலைவாழ் மக்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு படமாக இருக்கும் அளவிற்கு கதைக்களத்தை உருவாகியுள்ளனர்.
கதாநாயகன் தனது மனைவியை காப்பாற்ற மலையை விட்டு நகர்புறத்திற்கு வந்து மருத்துவ செலவிற்கு என்ன செய்கிறார், இவருக்கு குறிப்பிட்ட அதிகாரிகள் உதவினர்களா? எப்படி இவரின் மனைவியை கைப்பற்றினர் என்பது தான் கதை.
இது போன்ற நல்ல படங்களை மக்கள் திறையரங்கிற்கு சென்று பார்ப்பது நல்லது, ஆனால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தேன் தமிழ் முழு படத்தையும் இணையத்தில் கசியவிட்டது, வேதனைக்குரியது.
இதுபோன்ற படங்களை மக்கள் தியேட்டரில் சென்று பார்ப்பதனால், சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்தும் தயாரிப்பாளர்கள் இது போன்ற நல்ல படங்களை எடுப்பார்கள்.