ads
தமிழ்ராக்கர்ஸில் லீக்கானது புதியப்படமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
ராம் குமார் (Author) Published Date : Jun 17, 2019 09:50 ISTபொழுதுபோக்கு
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் யூடியூப் பிரபலங்கள் மற்றும் ஆர். ஜெ ரியோ ராஜ் இணைந்து நடித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றுள்ள நிலையில் படம் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா முதலில் நகைச்சுவையுடன் ஆரம்பித்தாலும் பின்னர் தீவிரமான கதை களத்தை நோக்கி செல்கின்றது. சமூக வலைதளங்கள் பிரபலமாக இருக்கும் முகங்களை வைத்து படம் எடுத்துள்ளனர் மேலும் சிறந்த கதை அமைப்பும் ஒளிப்பதிவும் கொண்டுள்ளது. நடைமுறை அரசியலில் நடப்பனவற்றை கதைக்களமாக கொண்டுள்ளது இப்படம். முன்பு வேறு அரசியல் பாணியில் உள்ள படங்களில் நடித்த நடிகர்கள் இப்படத்திலும் நடித்துள்ளனர். கதை ஓட்டம் சீராக இல்லாத நிலையில் கதையின் முக்கியதுவத்தை நெத்தி அடியாக பாதிக்காமல் சற்று இடறி மாற்று பாதையில் பயணித்து ரசிகர்களின் கவனத்தை சற்று திசை திருப்பியுள்ளது.
சிவா மற்றும் விக்கி இருவரும் இணைந்து யூட்டுப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இருவரும் மகிழ்ச்சியாகவும், வாழ்வை மாற்றும் விதமாக பெரிய நிகழ்ச்சி அவர்களது வாழ்க்கையில் நடக்கும் என்ற எதிர்பார்ப்போடும் உள்ளனர். தன்னிச்சையாக மாபெரும் தொழிலதிபரை சந்திக்கும் இவர்களுக்கு பணத்தாசையை ஏற்படுத்துகிறார் அவர். பணம் கிடைப்பதற்கு தனக்கு மூன்று காரியங்களை செய்யுமாறு நிபந்தனையும் வைக்கின்றார். இருவரும் சவாலை ஏற்று தொழிலதிபரின் காரியங்களை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது மீதி கதையாகும்.
திரைக்கதை நன்றாக இருந்த நிலையிலும் சமூகத்திற்கு தேவைப்படும் கருத்துகளையும் உள்ளடக்கி இருந்தது. ஆனால் உணர்ச்சிகரமான காட்சிகளை சிறிது கட்டாயமாக திரைக்கதைக்குள் நுழைத்தது போல் எண்ண தோன்றுகிறது. சில காட்சிகளில் சாமானிய மக்களின் நடத்தை மற்றும் அணுகுமுறையை தத்தரூபமாக எடுத்து காட்டியது. இவ்வாறான காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பு பெற்றும் ரசிக்கும் வண்ணமாகவும் இருந்தது. ரியோ ராஜ் மற்றும் விக்னேஷ் கூட்டணி படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. கதாநாயகியின் பாத்திரம் பேசும் படியாக அமையவில்லை. நீடிக்கப்பட்ட பதிப்பாக தோன்றுவதால் இப்படத்தின் முக்கிய பின்னடைவாக தோன்றுகிறது. சமூக வலைத்தளத்தில் இருந்து வெள்ளித்திரையில் செய்த முயற்சி பாரட்டுதலுக்குரியது.
படம் ஓரளவு நல்ல ஓப்பனிங் பெற்று மக்கள் கருத்தும் சுமாராக உள்ள நிலையில் இந்த லீக் சம்பவம் படத்தின் வசூலை சற்று சேதப்படுத்தும். வரும் நாட்களில் படம் எவ்வாரு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.