ads
Tamilrockers 2019: Mr Local தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது மிஸ்டர் லோக்கல்
ராம் குமார் (Author) Published Date : May 17, 2019 17:35 ISTபொழுதுபோக்கு
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் இந்த வாரம் வெளிவந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளிவந்த சில மணிநேரங்களில் இணையத்தில் லீக் ஆகிய அதிர்ச்சியை கொடுத்தது. அமெரிக்காவில் வியாழன் இரவு ப்ரீதியாக காட்சியை கண்டா ரசிகர்கள் படத்திற்கு சுமாரான விமர்சனத்தையே அளித்தனர். தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளம் படத்தை விரைவில் லீக் செய்தது எவ்வாறு என்று ஒருவரரும் அறியாத நிலையில் வெளிநாட்டில் முந்தய நாள் காட்சி கொண்ட படங்களே விரைவான லீக்கை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈகோ உள்ள பெண்ணிடம் தலையிட்டதால் சிக்கல்களை சந்திக்கின்றான் மகிழ்ச்சியாய் சுற்றி திரியும் வாலிபன். இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்கிறார்கள். இதுவே மிஸ்டர்.லோக்கல் திரைப்படத்தின் கதைக்கருவாக உள்ளது. ராஜேஷ் தனது முந்தைய படங்களில் செய்த தவறுகளை ஓரளவு தெரிந்து திருத்தி கொண்டாலும் கதைக்களத்தில் உள்ள சோர்வு ஆங்காங்கே புலப்படுகிறது.சிவகார்த்திகேயனின் காமெடி டைமிங் மற்றும் படத்தில் சொல்லும் அளவு உண்டு என்பது ரசிகர்களின் கருது.
கதை பாரிசில் ஒரு சிறையில் தொடங்குகிறது. மனோஹர் (சிவகார்த்திகேயன்) ஏன் ஒரு கைதியாக இருந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த படத்தின் இறுதி வரை காத்திருக்க வேண்டும். அவரது தாய் (ராதிகா) மற்றும் சகோதரி ஆகியோருடன் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகின்ற ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞன் கீர்த்தனா (நயன்தாரா) பணக்காரா வர்க்கத்தை சார்ந்த ஈகோ பிடித்த வணிக அதிபர். அவர்களின் தர்க்கம் குறைவாக குட்டி சண்டைகள் இருவருக்கும் இடையே ஒரு ஈகோ மோதல் எப்படி உருவாகிறது என்பதே மீதமுள்ள கதை.
சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் திரையில் அழகாக தோற்றம் அளிக்கின்றனர் இதுவே ஆறுதலாக அமைத்துள்ளது. அர்தமற்ற வசனங்கள், சம்பந்தம் இல்லாத காட்சிகள், சோர்வுற்ற உரையாடல்கள் மற்றும் இசை போன்றவை சளிப்படைய செய்கிறது. சிவா தனது பெரும்பாலான படங்களில் செய்ததைத்தான் இப்படத்திலும் செய்துள்ளார். சரண்யா பொன்வண்ணன் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தது போல ராதிகவும் இப்படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா போன்ற நடிகை இவ்வாறான படங்களை தேர்தெடுத்து நடித்தது ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.
பொழுதுபோக்கு படம் என்பதால் மோசமான தோல்வியை சந்திக்காது என்ற நம்பிக்கை இருந்தாலும் தமிழ்ராக்கர்ஸ் போன்ற சில இணையதள செயல்களால் தயாரிப்பாளர்கள் பெரும் அழுத்தத்தை சந்திக்கின்றனர். விமர்சனங்கள் எதிர்பார்த்தபடி வராத நிலையில் மிஸ்டர் லோக்கல் இனைய திருட்டு போன்ற தடைகளையும் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் தேர்ச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.