சூர்யாவின் என்ஜிகே பட தணிக்கை சான்றிதழ் வெளியீடு, பிரத்தியேக தகவல்கள்
ராம் குமார் (Author) Published Date : May 22, 2019 18:10 ISTபொழுதுபோக்கு
நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெயில்வரவுள்ள படம் என்ஜிகே. மிகுந்த தாமதத்திற்கு பிறகு இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தை கண்டா தணிக்கை குழு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கி உள்ளது. செல்வராகவன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்த செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொதுவாக இயக்குனர் செல்வராகவனின் படம் ராவான சண்டை காட்சிகள் மற்றும் முற்றிலும் அழுத்தமான காட்சிகள் இருப்பதால் பெரும்பாலும் யு/எ அல்லது எ சான்றிதழ் பெரும்.
சூர்யா பெரும் இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் போன்ற கலைத்துவம் கொண்ட மாறுபட்ட இயக்குனரோடு சேர்கிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளன. படம் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இப்போது வரை பெரும் தாமதம் ஆனாலும் ரசிகர்கள் உற்சாகம் குறையாமல் படத்திற்காக காத்திருக்கின்றனர். டீஸர் ட்ரைலர் வெளியானதும் போதும் ஜனமும் படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்க்க தொடங்கினர். யுவனின் இசை பெரிதும் கவனத்தை ஈர்த்த நிலையில் சித் ஸ்ரீராம் பாடிய அன்பே பேரன்பே பாடல் பெரும் வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களை ஆட்கொண்டுவருகிறது.
சிறப்பு வாய்ந்த செல்வா - யுவன் கூட்டணி பல ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வருகிறது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் இசை வெளியானாலும், படம் வெளிவராததால், ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில், என்ஜிகே இசையில் புது உற்சாகத்தை தரும் என நம்புகின்றனர் ரசிகர்கள். ட்விட்டர் வலைதளத்தில் எமோஜி பெற்ற என்ஜிகே, இறுதிக்கட்ட ரிலீஸ் பணியில் உள்ளதால் படத்தின் விளம்பர பணிகள் சூடுபிடித்துள்ளது. தென்னிநிந்திய திரையரங்கு ரசிகர் காட்சிகள் டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி பெரும்பாலும் டிக்கெட்டுகள் முடிந்த நிலையில் படத்தை கோலாகலமாக உலகெங்கும் வெளியிட ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனம் பணிகளை செய்து வருகிறது.
மே 31 அன்று வெளியாகும் என்ஜிகே, உலகெங்கும் பெரிய ஓப்பனிங் வசூல் பெரும் என்று ரசிகர்கள் உறுதியாக உள்ளனர். கடந்த சில படங்களில் தோல்வியை சந்தித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் ஒரு நல்ல திருப்புமுனையாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரம் ஆவலுடன் உள்ளது. ராகுல் ப்ரீத், சாய் பல்லவி மற்றும் புதிய நடிகர்களோடு கூட்டணி சேரும் சூர்யா தனது நந்தகோபாலகுமரனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பாற்றலை காட்டவுள்ளார் என்பது வெளியான ப்ரோமோக்களை பார்க்கும்போது நிரூபணம் ஆகிறது.