ads
சிவகார்த்திகேயனின் ஹீரோ சினிமா விமர்சனம். Hero Movie Review
புருசோத்தமன் (Author) Published Date : Dec 20, 2019 10:43 ISTபொழுதுபோக்கு
இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்பில் வெளியானது. பொதுவாக தனது நடிப்பில் குழந்தைகளை கவரும் சிவகார்த்திகேயன், கொஞ்சம் விலகி அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார்.
இன்று வெளியான இந்த படத்திற்கு போட்டியாக கார்த்தி நடித்த தம்பி வெளியாகி உள்ளது. ஹீரோ படத்தை இயக்கிய இயக்குனர் மித்ரன் போன வருடம் வெளியான இரும்புத்திரை வெற்றி படத்தை இயக்கியவர். இரும்புத்திரை போன்றே இந்த ஹீரோ படமும் சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை எடுத்துக்காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
வழக்கமான கதை என்றாலும், விறுவிறுப்பான காட்சிகளை சிறப்பாக அமைத்துள்ளார் இயக்குனர். சூப்பர் ஹீரோவாக ஆசைப்படும் சிறுவன் வாழும் அந்த காலகட்டத்தில் டிவியில் வரும் சக்திமான் சூப்பர் ஹீரோவை தனது ரோல் மாடலாக எடுத்துக்கொண்ட சில விபரீதமான முயற்சிகள் எடுக்கிறான். வளர்ந்த பின் குறும்புத்தனமான தவறுகளை செய்வதும், பின்னர் திருத்திக்கொண்டு, தவறுகளை தட்டி கேட்கிறான்.
இதற்கு முன் முகமூடி திரைப்படம் இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமாக வந்தாலும், சிறப்பான கதைக்களம் இல்லாதலால், மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஆனால் இயக்குனர் மித்ரனின் இந்த முயற்சி மிகவும் பாராட்ட வேண்டியது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது மூளையை ஆக்ஷனில் பயன்படுத்தியுள்ளார். இரும்புத்திரையில் புத்திசாலி வில்லனாக வளம் வந்தவர், இந்த படத்தில் ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் காமெடி காட்சிகள் இவரின் படங்களான ரஜினி முருகன், சீமராஜா போல் இல்லை. சிவகார்த்திகேயனின் காமெடி விரும்பி வரும் சிறுவர்களுக்கு குறைந்த அளவிலே காமெடி காட்சிகள் உள்ளது, ஆனால் சூப்பர் ஹீரோ ஸ்டைல் ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக நடித்திள்ளதால் குழந்தைகளை கவரும்.
படத்தை குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு நன்றாகவே உள்ளது, முக்கியமாக குழந்தைகளுடன் பார்த்தால் விழிப்புணர்வு கிடைக்கும்.