ads
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு வசூல் சாதனையில் சார்பட்டா பரம்பரை
புருசோத்தமன் (Author) Published Date : Aug 02, 2021 18:32 ISTபொழுதுபோக்கு
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு ஒரு நல்ல படத்தின் மூலம் வசூல் சாதனை செய்த அமேசான் பிரைம் வீடியோ. ஏற்கனவே சூரரைப் போற்று படத்தின் மூலம் அதிக சந்தாதாரர்களை பிடித்த அமேசான் பிரைம் நிறுவனம், சார்பட்டா பரம்பரை படத்தில் நல்ல ஒரு வசூலை எடுத்துள்ளது.
ஆர்யா நடிப்பில் பெரிய எதிர்பார்புகளுடன், ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் சார்பட்டா பரம்பரை. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாதலால், சார்பட்டா பரம்பரை முழு படம் அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸ் ஆனது.
1970 களில் இப்படம் நடைபெறுவதை காட்சி அமைதியுள்ளனர். வட சென்னையில் இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரு குழுக்களுக்கு மத்தியில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியே படத்தின் கதைக்களம்.
மேலும் இந்த படத்தில், உள்ளூரில் குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் ஈடுபடும் அரசியலையும் காட்டுகிறது. படத்தில் சில வரலாறு தவறுகளை ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் மற்ற விமர்சகர்கள் பதிவேற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பசுபதி சார்பட்டா பரம்பரையின் முதன்மை பயிற்சியாளராகவும், இந்த பரம்பரையை வழிநடத்துபவராகவும் இருக்கிறார்.
சிறுவயது முதல் குத்துச்சண்டையில் ஆர்வம் மிக்க இளைஞராக வளரும் ஆர்யா, ஒரு சந்தர்ப்பத்தில், முதன்மை பயிற்சியாளர் பசுபதி அவமான படுவதை தாங்கிக்கொள்ளாமல், குத்துசண்டை சவால் போட்டியில் இறங்குகிறார்.
சிறுவயது முதல், பசுபதியின் குதிச்சண்டை நுணுக்கங்களை நன்கு அறிந்த ஆர்யா, சவாலில் வெற்றி பெறுகிறார், இதை சார்பட்டா பரம்பரை சேர்ந்த மற்ற சக குத்துசண்டை வீரர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
ஆர்யா சவாலில் வெற்றிபெற்றதால், இடியாப்ப பரம்பரை இறுதி போட்டியில் பங்கேற்க பசுபதி ஆர்யாவை முன்னிறுத்துகிறார். ஆர்யா இதற்கு முன் எந்த ஒரு குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டதில்லை, எங்களுக்கு அனுபவம் இல்லாதவர்கள் கூட சண்டையிட விருப்பம் இல்லை என்று இடியாப்ப பரம்பரை சேர்ந்தவர்கள் மறுக்கின்றனர்.
சில போராட்டங்களுக்கு பின், இடியாப்ப பரம்பரை குத்துசண்டை வீரர் வேம்புலியுடன் மோத வேறு ஒரு மிக சவாலான குத்துச்சண்டையில் முன்னேறுகிறார் ஆர்யா.
இதற்கிடையில் ஆர்யா, மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயனை திருமணம் செய்துகொள்கிறார்.
இறுதியாக இடியாப்ப பரம்பரை வேம்புலியுடன் குத்துசண்டை தொடங்குகிறது, போட்டியின் இறுதியில் சார்பட்டா பரம்பரை சேர்ந்த சிலர் ஆர்யாவை, குத்துசண்டை மேடையில் தாக்குகிறார்கள்.
இதற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் இருக்கும் கதையில் ஆர்யாவின் வாழ்கை எப்படி இருக்கிறது, மீண்டும் குத்துச்சண்டையில் இடியாப்ப பரம்பரை குத்துசண்டை வீரர் வேம்புலியை வீழ்த்தினரா என்பது கதையின் முடிவு.