பிகில் ட்ரெய்லர்: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கோயம்பேடு ரோகிணி திரையரங்கம்
புருசோத்தமன் (Author) Published Date : Oct 14, 2019 05:30 ISTபொழுதுபோக்கு
பிகில் ட்ரெய்லர்: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கோயம்பேடு ரோகிணி திரையரங்கம். விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் படத்தின் ட்ரெய்லர் பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஏற்றது போல் வசனங்களும், திரைக்கதையும் இருப்பதால், பல வசனங்கள் இப்போதே பிரபலமடைய தொடங்கி உள்ளது, அதில் மிக பிரபலமான வசனம் "செஞ்சிட்டா போச்சி".
சென்னை, கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் மிகவும் பிரபலம். ஹீரோக்களுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது போல் குறிப்பாக இந்த திரையரங்கிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.
நேற்று வெளியான பிகில் படத்தின் ட்ரைலரை பெரிய LED திரையில், விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தளிக்க ரோகிணி திரையரங்க நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
இதற்காக, கடந்த பத்து நாட்களாக பல்வேறு வேளைகளில் ஈடுபட்டிருந்த ரோகிணி திரையரங்கு நிர்வாகம், இதற்காக சில லட்சங்களையும் செலவு செய்து ரசிகர்களை மகிழ்விக்க இருந்தனர்.
பெரிய LED திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்த அணைத்து சாதனங்களும் தயார் நிலையில் இருந்தது, ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்புடன் 6 மணிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
தாங்கள் லைசென்ஸ் வாங்கிய திரை தவிர, இது போன்று பெரிய திரையில் வெளிப்படையாக ஏதாவது ஒளிபரப்பு செய்தால், அதற்கு கார்ப்பரேஷன் மற்றும் காவல் துறையில் சட்டப்படி அனுமதி பெற வேண்டும்.
இதற்க்கு பெரும் முயற்சி எடுத்தது ரோகிணி திரையரங்கு நிர்வாகம், ஆனால் இதற்கு காவல் துறை சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணத்தினால், அனுமதி தர மறுத்துவிட்டது.
இதனால் அங்கு கூடிய ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்காக ரோகிணி திரையரங்கு நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இவர்களை போன்ற திரையரங்கு உரிமையாளர்கள் ரசிகர்களுக்காக எடுத்த முயற்சி, பாராட்டிற்குரியது.