ரஜினிகாந்தின் ஜெயிலர் தமிழ் திரைப்படத்தின் முதல் போஸ்டர்
விக்னேஷ் (Author) Published Date : Aug 22, 2022 16:00 ISTபொழுதுபோக்கு
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தமிழ் திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதைக் குறிக்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன், நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தின் தோல்வியால், விமர்சனத்திற்க்கு ஆளானார்.
தற்பொழுது, ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இடையேயான முதல் கூட்டணியை ஜெயிலர் படம் மூலம் உறுதி செய்தது பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனம், சன் பிக்சர்ஸ்.
ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரஜினிகாந்த் காக்கி பேன்ட் மற்றும் முழு கை வெள்ளை சட்டை அணிந்திருப்பதைக் காணலாம்.
ஜெயிலரில் தமன்னா பாட்டியா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க சிறைச்சாலையில் படமாக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது
ரஜினிகாந்த் கடைசியாக தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு சுந்தர், மீனா மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். அண்ணாத்தே பாக்ஸ் ஆபிஸில் ஒரு டப்பாவாக மாறியது.
அண்ணாத்தாவின் நஷ்டத்தை ஈடுசெய்ய சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்தை ஜெயிலர் படத்திற்காக ஒப்பந்தம் செய்ததாகவும், அவருடைய சம்பளத்தை 50% குறைத்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.