ads
சாட்சிக்காரனை விட சண்டைக்காரன் காலில் விழலாம், தமிழ்ராக்கர்ஸ் குறித்து பிரபல நடிகர் மாறுபட்ட கருத்து
கௌரிசங்கர் (Author) Published Date : May 22, 2019 18:35 ISTபொழுதுபோக்கு
5 ஸ்டார் படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமனாவர் நடிகர் பிரசன்னா அவர்கள். அஞ்சாதே படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வாய்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த பொன்னான வாய்ப்பை திறம்பட செய்து சாதித்து வருகிறார் பிரசன்னா. இவர் சமீபத்தில் நடித்த படங்கள் சென்னையில் ஒரு நாள், பவர் பாண்டி, துப்பறிவாளன். மேலும் நடிகர் கலையரசனுடன் இணைந்து காலக்கூத்து என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் பிரசன்னா.
தற்பொழுது நடிகர் பிரசன்னா ஒரு மாறுபட்ட வேடத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். திரவம் என்று பெயர் கொண்ட இந்த வெப் சீரிஸில் சாதாரண வேதியியலாளராக நடித்து வருகிறார். முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தனது அசத்தலான நடிப்பை நடிகர் பிரசன்னா வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் காத்திருகின்றனர். நடிகர் பாபி சிம்ஹா இதே போல வெள்ள ராஜா என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். அது அமேஸான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரவம் வெப் சீரிஸ் நேற்று ஜி 5 என்கிற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது அப்பொழுது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் பிரசன்னா தமிழ்ராக்கர்ஸ் பற்றி ஒரு மாறுபட்ட கருத்தை கூறினார்.
அவர் கூறியதாவது, ஜி 5 என்கிற ஆன்லைன் தொலைகாட்சியை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்ய 49 ரூபாய் செலவாகிறது. இது குறித்த விளம்பர அறிக்கையை நடிகர் சூர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகரிடம் இருந்து வந்த ஒரு பதில் டுவிட் என்னை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. அந்த ரசிகர் கூறியது என்னவென்றால். நாற்பத்தி ஒன்பது ரூபாய் செலவு செய்து இந்த தொடரை பார்ப்பதற்கு பதிலாக, பத்தே பத்து நிமிடங்கள் காத்திருந்து தமிழ்ராக்கர்ஸில் வெளியாகும் ஹைச்-டி பிரின்ட்டில் பார்க்கலாமே என்பது தான் அந்த ரசிகரின் பதில். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தரத்தை பொருத்து ஒரு ஞாயமான விலை இருக்கிறது. எதையும் இலவசமாக நாம் பெற நினைத்தாலும். உழைப்பிற்கும் தரத்திற்கும் நாம் செலுத்தும் ஞாயமான விலையையும் உதாசனப்படுத்தக் கூடாது. தமிழ்ராக்கர்ஸ் போன்றவர்கள் இருக்கும் இந்த காலத்தில் படம் எடுப்பது மிகப்பெரிய ரிஸ்க்காக பார்க்கப்படுகிறது. இது சினிமாத்துறையின் அழிவிற்கு ஆரம்பமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
நடிகர் விஷால் தமிழ்ராக்கர்ஸ்க்கு எதிராக பல முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அமேஸான், ஜி 5, நெட் ஃபிலிக்ஸ் போன்ற வலைத்தளங்களுக்கு படம் பண்ணுவதற்கு பதிலாக, இனி நேரடியாக தமிழ்ராக்கர்ஸுக்கு படம் செய்து அவர்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு அதற்கான வருவாயை பெற்றுகொள்ளலாம் போலிருக்கிறது என்று கூறியுள்ளார் நடிகர் பிரசன்னா.