ads

பிரபாஸின் பிரம்மாண்ட படமான சாஹோவின் படப்பிடிப்பு மற்றும் பாடல் வெளியீடு தகவல்கள்

சாஹோ பாடல் போஸ்டர்

சாஹோ பாடல் போஸ்டர்

அகில இந்திய அளவில் பிரமாண்ட படமாக உருவாகி வரும் சாஹோ படப்பிடிப்பு  கடைசி கட்டத்தில் உள்ளது. படத்தின் இறுதி அட்டவணை மற்றும் இரண்டு பாடல்கள் இன்ஸ்ப்ரக் மற்றும் ஆஸ்திரியாவின் டிரோல் பகுதியில் பல இடங்களில் படமாக்கப்பட்டன. இப்படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், முரளி சர்மா, நீல் நிதின் முகேஷ், வென்னேலா கிஷோர், ஜாக்கி ஷிராஃப், சன்கி பாண்டே மற்றும் மந்திரா பேடி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தி யூவி கிரியேஷன்ஸ் வெளியிட அறிவிப்பில் கூறியிருந்தாவது.

படப்பிடிப்பு ஆரம்பத்தில் ஆல்பைன் நகரமான இன்ஸ்ப்ரக்கில் தொடங்கியது. இந்த நகரம் ஆச்சரியமூட்டும்  இயற்கை அழகுடன் நகர மையத்துடன் அழகாக காட்சியளிக்கும். ஹவுஸ் ஆஃப் மியூசிக், இன்ஸ்ப்ரக் டிராம், கோஹ்தாயில் உள்ள ஃபின்ஸ்டெர்டல் அணை, மற்றும் அட்லெர்ஸ் ஹோட்டல் உள்ளிட்ட இன்ஸ்ப்ரூக் முழுவதும் சாஹோ படமாக்கப்பட்டது. கூடுதலாக, ஸ்டூபையர் பனிப்பாறை மற்றும் சோல்டனில் உள்ள கெய்ஸ்லாச்சோகல் ஐஸ்க்யூவில் உள்ள 'டாப் ஆஃப் டைரோல்' மலையில் ஒரு காதல் பாடலுக்காக படப்பிடிப்பு நடைபெற்றது. இது எங்கள் குழுவினருக்கு மறக்கமுடியாத அனுபவங்களில் ஒன்றாகும். ரொய்ட்டில் உள்ள ஹைலைன் சஸ்பென்ஷன் பிரிட்ஜில் பாடலின் சில பகுதிகள் படமாக்கப்பட்டது.

ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு இடங்கள் மிகவும் அற்புதமானவை, அங்கு எங்கள் திரைப்படத்திற்கான சில அற்புதமான காட்சிகளை நாங்கள் படமாக முடிந்தது - என்று தயாரிப்பாளர் பிரமோத் உப்பலபதி கூறினார். அண்மைய செய்தி என்னவென்றால் சாஹோ படத்தின் முதல் பாடல் வலைத்தளங்களில் வெளியாக உள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடலின் பெயர் காதல் சைக்கோ என தலைப்பிடப்பட்டு, பாடலின் வீடியோ டீஸர் விரைவில் வெளியாகப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபாஸ் நடிப்பில் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாக உள்ள சாஹோ, ஆகஸ்ட் 15 குடியரசு தினமன்று அணைத்து மொழிகளிலும் வரவுள்ளது. பாகுபலியை அடுத்து பிரபாஸ் பெரிதும் நம்பியிருக்கும் இப்படம் உலக அளவில் 350 கோடிக்கு மேல் வியாபாரம் செய்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட சாஹோ, பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியை போல் பெரும் வசூலை ஈட்டி வெற்றி பெரும் என்று சினிமா வட்டாரங்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பிரபாஸின் பிரம்மாண்ட படமான சாஹோவின் படப்பிடிப்பு மற்றும் பாடல் வெளியீடு தகவல்கள்