நவம்பர் ஸ்டோரி தமிழ் வெப் சீரிஸ் டவுன்லோட் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது
விக்னேஷ் (Author) Published Date : May 21, 2021 19:52 ISTபொழுதுபோக்கு
டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியான புதிய கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் "நவம்பர் ஸ்டோரி" . ஏழு எபிசோட்களை கொண்டுள்ள நவம்பர் ஸ்டோரி, சுமார் நான்கு மணிநேரம் ஓடுகிறது.
முக்கிய வேடத்தில் தமன்னா நடித்துள்ளார், இவருடன் பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ், ஜிஎம் குமார், மைனா நந்தினி போன்றோர் நடித்துள்ளனர்.
ஆள் இல்லாத வீட்டில் நடந்த ஒரு கொலையை மையப்படுத்தி, இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயல் அவதிப்படும் தனது தந்தையை குணப்படுத்த, தமன்னா தனது மற்றொரு வீட்டை விற்க முயற்சி செய்கிறார்.
இந்நிலையில் தமன்னா விற்க நினைக்கும் வீட்டிற்குள் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறார்.
கொலை செய்தவர்கள், பெண்ணின் உடலில் பெயிண்ட்டை ஊற்றி கொலைக்கு சம்பந்தப்பட்ட தடயங்களை அளித்துள்ளனர். இதனால் தடவையில் நிபுணர்களுக்கும் காவல்துறைக்கும் இந்த கொலை பெரிய சவாலாக இருக்கிறது.
கதையில் பல கதாபாத்திரங்கள் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும், இறுதியில் ஒரு நபரை மையப்படுத்தி கதையை முடிக்கிறார்கள். நமக்கு கடைசி எபிசொட் வரை கொலைக்கான காரணத்தை யூகிக்க முடியாத வகையில் இயக்குனர் இந்திரா சுப்ரமணியன் மிக சிறந்த முறையில் இயக்கியுள்ளார்.
விறுவிறுப்பான காட்சியமைப்பில், பார்க்கும் ரசிகர்களை கொலையாளி யார் என்று மூன்றாவது எபிசோடில் கண்டுபிடிக்க வைத்தாலும், எதற்காக இந்த கொலை என்று நகரும் கதைக்களம் மிகுந்த சஸ்பென்ஸ் ஆகா உள்ளது.
கிரைம் எழுத்தாளரான தமன்னாவின் தந்தையின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழும் போது, அவரை காப்பாற்ற போராடும் தமன்னா, தனது நடிப்பை சிறந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளார் .
கொலையை போலீசார் விசாரிக்கும் போது தாமாக முன்வந்து உதவுகிறார் முன்னாள் தடவியல் அதிகாரி பசுபதி. பல ஆண்டுகளுக்கு பிறகு பசுபதியை திரையில் பார்க்கும் போது, தனது நடிப்பின் திறமையை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
தமன்னா, பசுபதி, ஜிம் குமார், இவர்களுக்கு ஈடாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அருள்தாஸ் .
காவல்துறை ஆய்வாளராக வரும் அருள்தாஸ் கொலையை விசாரிக்கும் விதம், இதற்காக மற்ற போலீசாரை பயன்படுத்தும் விதம், இவரின் வழக்கமான நக்கல் நகைச்சுவை கலந்து இருக்கிறது.
பல கிரைம் திரில்லர் பாடங்கள் வந்திருந்தாலும், இது ஒரு புதிய கதை. கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் .
ஒருவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பத்தை எதிர்நோக்கி செல்லும்போது, அது சிலருக்கு அமைகிறது, சிலருக்கு அமைவதில்லை. நாம் எதிர்பார்கும் அந்த வாழ்க்கையின் திருப்பம் அமையவில்லை என்றால் தளரக்கூடாது, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்று கதையை முடிக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓ.டி.டி தளத்தில் அதிக படங்கள் ரிலீஸ் ஆக தொடங்கியுள்ளது. இந்நிலையில் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் ஏழு எபிசோடுகளும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் ஒரிஜினல் பதிப்புகளுடன் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள லீக் செய்துள்ளனர்.