ads
என்ஜிகே: சாய் பல்லவியின் திரை பயணத்தில் மேலும் ஓர் உச்சம்
ராம் குமார் (Author) Published Date : May 29, 2019 13:10 ISTபொழுதுபோக்கு
சென்னை சத்யம் தியேட்டரில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத ஒரு சாதனையாக ஒரு தியேட்டரில் ஒரு படம் 259 நாட்களுக்கு ஓடியது என்றால் அது மலையாள ப்ளாக்பஸ்டர் படமான ப்ரேமம் . சாயி பல்லவியின் நடிப்புக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உருவெடுத்தனர், இது மலையாள திரைப்படத்தில் கேரளாவில் பல திரையரங்குகளில் 150 க்கும் அதிகமான நாள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. யதார்த்தமான நடிப்புடன் இயற்கையான மலையாள தோற்றத்துடன் சாய் பல்லவி தமிழ் மற்றும் மலையாள பார்வையாளர்களின் இதயத்தை வென்றார். இப்போது அவர் கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார், சமீபத்தில் தமிழ் படங்களில் அதிகமாகக் காணப்படுகிறார்.
இரண்டு முறை ஃபிலிம்பேர் விருது வென்றவர்: நான்கு வருட நடிப்பில் சற்று குறுகிய காலத்தில், சாய் பல்லவி இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றார். ப்ரேமம் மற்றும் தெலுங்கு படமான ஃப்டா ஆகிய படங்களுக்கு ஃபிலிம்பேர் விருது வென்றார். சேகர் கம்முலா இயக்கிய 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படம் உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள பார்வையாளர்களின் கனவு கன்னியாக சாய் பல்லவி உள்ளார்.
பிரேமம் மற்றும் ஃபிடா படங்களுக்கு பிறகு சாய் பல்லவி தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடிக்கத்தொடங்கினார். அவரது முதல் தமிழ் திரைப்படம் இயக்குனர் விஜய் இயக்கிய தியா ஆகும். இந்த படம் வசூல் ரீதியில் சரியாக போகவில்லை என்றாலும் சாய் பல்லவியின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது, சாய் பல்லவியின் நடிப்பிற்கு விமர்சகர்கள் அதிக மதிப்பீட்டை அளித்தனர். மாரி 2 படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷுடன் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பினாலும் சாய் பல்லவி மற்றும் தனுஷ் நடனமாடி யுவன் இசையமைத்த ரௌடி பேபி பாடல் இந்தியா அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
என்ஜிகே'வில் சாய் பல்லவி: என்ஜிகே'வில் சூர்யா-செல்வராகவன்-சாய் பல்லவி கூட்டணியை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அரசியலை மையமாக கொண்ட திரைப்படம் என்றாலும், செல்வராகவன் சாய் பல்லவி மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோறின் கதாபாத்திரங்களை இவாறு கதையில் கையாளுகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலும் உள்ளனர். இப்படம் தமிழ் திரையுலகில் சாய் பல்லவிக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்பது தெரிகிறது. இன்னும் படம் வெளியாவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.