Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

என்.ஜி.கே விமர்சனம்: அரசியல் நையாண்டி

என்.ஜி.கே விமர்சனம்

வெகு நாட்களாய் ரசிகர்களால் ஆவலுடன் எதிர் பார்க்கப்பட்டு நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்தது நந்தா கோபாலன் குமரன் (என்.ஜி.கே). 6 வருடங்களுக்கு பிறகு தனது பாதையை நோக்கி இப்படத்தின் மூலம் புதுப்பித்துள்ளார் செல்வராகவன். அரசியல் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் கோடை கால இறுதியில் வெளியாகியுள்ளது. சினிமா ரசிகர்களுக்கு பெரிதும் விருந்தாகவும், பொழுதுபோக்காகவும் அமைத்துள்ளது. பொங்கல் பண்டிகை வேலையில் வெளியான விசுவாசம், பேட்ட பெரும் அளவில் ரசிகர்களை வரவேற்க்கப்பட்டது. இவ்விரண்டு பெரிய படங்கள் வெளியாகி ஆண்டின் பாதி அளவில் திரையரங்குகளில் ஓடி பெரும் வருமானத்தை ஈட்டியது. இப்போது வெளியாகி உள்ள என்.ஜி. கே ரசிகர்களை மனதில் பிரவேசித்து பெரும் வெற்றிகளை அடையுமா என்று பொறுதிருந்து காண்போம். என்.ஜி.கே படத்தின் விமர்சனங்களை மற்றும் படத்தினை பற்றி அறிந்து கொள்ளவோம்.

சூர்யா இப்படத்தில் நந்தா கோபாலா குமரன் என்ற கத்தபத்திரத்தில் சுறுசுறுப்பான தன்மை கொண்ட ஒரு பயமற்ற இளைஞனாக வருகின்றர். தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் விதமாக கதாநாயகனின் கதாபாத்திரம் என்ஜிகே பட வெற்றிக்கு முதல் காரணியாக உள்ளது. கதாநாயகன் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரு முழுமையான தனக்குரிய நடிப்பை கொண்டு திரையை அலங்கரிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் பின்பகுதியாக கொண்டு அனைத்து தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து உள்ளது. கிளர்ச்சியூட்டும் கருப்பொருள் கொண்டு காதல், மர்மம் மற்றும் நகைச்சுவை வரை, இப்படம் அனைத்து தரப்பிலும் முன்னிலை பெற்று முக்கிய மற்றும் வெற்றி படமாக வலம் வருகின்றது. கதையின் பெரும்பகுதி உரையாடல்கள் மற்ற செல்வா மற்றும் சூர்யா திரைப்படங்களை தாண்டி தனித்துவம் பெற்று விளங்குகின்றது.

முதல் பாதி மெதுவாக செல்கிறது. இந்த படத்தின் முக்கிய மையத்திற்குள் பல நிகழ்வுகளைத் கொண்டு செல்கின்றது, மேலும் திகிலூட்டும் இடைவெளியை அடைகிறது. செல்வராகவனால் கையாளப்பட்ட தன்மை ஆழமானது, அவர் இயக்கத்தில் சிறந்தவர் என்று இப்படத்தின் மூலம் நிரூபிக்கிறார்.

எப்போதும் போல், தயாரிப்பாளர் ஒவ்வொரு நிமிடத்திலிருந்தும் மாறிக்கொண்டிருக்கும் எதிர்மறை பாத்திரங்ககளை இப்படத்தில் இணைத்துள்ளார். செல்வராகவன் படத்தில் ஒரு கல் துண்டு கூட முக்கியத்துவம் பெற்று இருக்கும் இப்படத்திலும் முக்கியத்துவத்தையும் சுவரசியத்தையும் துளி கூட குறையாமல் வழங்கி உள்ளார். படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் திரையில் பலம் கொண்டு வருகிறது. ஒவ்வொரு பாத்திரங்களும் கதைக்கு ஊட்டம் அளிப்பதால் பல நெகிழ்வான காட்சிகள் இப்படத்தில் அமைந்துள்ளது.

படம் முழுவதும் அதன் கரு மாறாமல் எவ்வித ஓட்டைகள் இல்லாமல் பயணிக்கிறது. படம் முழுவதும் வர்த்தக காரணிகள் காணப்பட்டாலும் முக்கிய கதையில் இருந்து விலகாமல் தனக்குரிய பாதையில் செல்கின்றது. கலப்படம் இல்லாத தரமான படத்தை வழங்குவதில் கைதேரந்தவர் இயக்குனர். அவரது படைப்புகளை ஆதரிக்கும் விதமாக தயாரிப்பாளர் இப்படத்தினை தயாரித்து வெளியிட்டுள்ளனர். படத்தின் மூலம் வழங்கப்பட்ட சமூக கருத்து வலுவாக இருந்தாலும்,  திடமான கதையினால் சமூக கருத்தை பார்க்காமல், கலை மற்றும் கலைக்கூடத்தின் முக்கிய தளமாக விளங்குகிறது. இன்னும் சமூக கருத்தை தரமாக பதித்திருக்கலாம் என தோன்றுகிறது.

முதல் பகுதியில் சூர்யாவின் கதாபாத்திரம் வேறுபட்டு இருந்தாலும், இரண்டாம் பகுதியில் மின்சார கணம் கொடுப்பது போன்று ககதபத்திரமும் அவரது நடிப்பும் விருந்தளிக்கின்றது. சூர்யாவின் கண்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு அதிகபட்சமாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு தனது பாத்திரத்தை வெளி கொணரும் அச்சாக இப்படம் அமைந்துள்ளது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தத்ரூபமாக நடித்து பட குழுவினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடிப்பது நடிகர் சூர்யாவின் சிறந்த பலமாக உள்ளது.

படத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த சாய் பல்லவி, தனது பாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளார். பாத்திரத்திற்கு தேவையான நடிகர்களை சரியாக செல்வராகவன் சேகரித்துள்ளார்.

செல்வராகவன் - யுவன் - சூர்யா மூவரும் ஒரே நேரத்தில் இணைத்து பொழுதுபோக்கு, கலை மற்றும் சமூக அக்கறையும் முழுமையாக ஒரே படத்தில் கொடுத்து உள்ளனர். இரண்டாம் பாதியில் தொடக்கம் முதல் முடிவு வரை கதாநாயகனின் மாற்றம் கதை நகர்விற்கு முக்கிய காரணமாக உள்ளது. பாடல்களும் மற்றும் பாடல்கள் அமைத்த காட்சிகளும் மனதை கவரும் வண்ணம் இயக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் தனித்து விளங்கும் யுவன் இப்படத்திலும் பின்னணி மிரட்டுன் விதமாக கதை களத்திற்கேற்ப அமைந்துள்ளது. இப்படத்தில் ஒரு படி தாண்டி பின்னணியில் தனுக்கென தனி பாதையை இக்கூட்டணியுடன் உருவாக்கியுள்ளர் இசையமைப்பாளர் யுவன்.

ரசிகர்களை சில காட்சிகளில் காத்திருக்க வைத்திருந்திருந்தாலும்,கதைக்கு தேவையான தருணங்களை கொண்டு காத்திருப்பிற்கான பலனை முழுமையாக வழங்கி உள்ளது. மார்க்கெட் சண்டை காட்சிகள் மூலம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார் நடிகர் சூர்யா. சண்டை காட்சிகள் மூலம் திகிலான அனுபவம் பெற முடிகிறது. செல்வ படங்களில் வரும் இருண்ட காட்சி அமைப்புகள் இல்லாமல் வெளிச்ச பின்னணியில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாதியில் அரசியல் நையாண்டி படத்தில் அதிகமாக உள்ளன. எந்த கருணையும் காட்டப்படாது அரசியலில் உள்ள மக்களை தரமாக செய்துள்ளது இந்த படம். 

இயக்குனருக்கும் நடிகருக்கும் உள்ள மனகசப்புகளை தாண்டி மக்கள் மத்தியில் இருவரின் கூட்டணி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ந்து வரும் சம்பவங்களை கோர்த்து படம் இயக்கி அதனை தயாரித்து வெற்றி கண்டுள்ளனர் படக்குழுவினர். மீண்டும் தனது திறமையை மக்களிடம் தகுந்த வழியில் சேர்த்து வெற்றி கண்டுள்ளார் இயக்குனர் செல்வராகவன். மக்களால் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது நந்தா கோபாலன் குமரன்.

என்.ஜி.கே விமர்சனம்: அரசியல் நையாண்டி