நந்தகோப்பாலகுமரன் வாரான் ரசிகர்களுக்காக காமன் டீபி வெளியிட்ட என்ஜிகே படக்குழு
ராம் குமார் (Author) Published Date : May 26, 2019 23:45 ISTபொழுதுபோக்கு
நந்தகோப்பாலகுமரன் வாரான் ரசிகர்களுக்காக காமன் டீபி வெளியிட்ட என்ஜிகே படக்குழு; சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இந்த வாரம் பிரமாண்ட ரிலீசுக்கு காத்திருக்கும் படம் என்ஜிகே. படம் இப்பொது வரும் அப்போது வரும் என எதிர்பார்த்து தள்ளிப்போனநிலையில் படம் இறுதியாக வரும் வெள்ளி மே 31 அன்று உலகெங்கும் வெளியாக உள்ளது.
ட்விட்டரில் படக்குழு தற்போது ரசிகர்களுக்காக தங்கள் ட்விட்டர் கணக்கில் வைத்துக்கொள்ள காமன் டீபி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் தங்களது ட்விட்டர் கணக்கில் தங்கள் புகைப்படமாக பதிவு செய்து தங்கள் உட்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சூர்யா ரசிகர்கள் உட்சாகத்தின் உச்சியில் காத்திருக்கும் இப்படம் சென்னை திருநெல்வேலி கோவை பெங்களூரு கேரளா ஆந்திர என பல்வேறு தென்னிந்தியா இடங்களில் அதிகாலை ரசிகர் காட்சி திட்டமிடப்பட்டு வருகிறது.
சமீத்தில் வெளியான சூர்யா படங்களை காட்டிலும் இப்படம் மிகுந்த கொண்டாட்டங்களுடன் வெளியாகிறது. இந்தியாவில் மிக உயரமான கட்- அவுட் ரசிகர் காட்சிகள் அமெரிக்காவில் அதிக திரையரங்க வெளியீடு போன்ற ஏற்பாடுகளை தாண்டி என் ஜி கே ஒரு புதிய சாதனையை படைக்கவுள்ளது. தென் கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை சூர்யா செல்வராகவன் படம் பெற்றுள்ளது. அதுபோல ரஜினி கமல் விஜய் அஜித் படங்களை தொடர்ந்து முதல் முறையாக சூர்யா நடிக்கும் என்ஜிகே ஐரோப்ப்பாவில் உள்ள உலகின் மிகப்பெரிய திரைஅரங்கமான லி கிராண்ட் ரெக்ஸில் படம் திரையிடப்படவுள்ளது. இதுக்கு முன்னர் கபாலி மெர்சல் விஸ்வரூபம் விசுவாசம் போன்ற பெரிய படங்கள் மட்டுமே திரையிடப்பட்ட அந்த இடத்தில என்ஜிகே திரையிடப்படுவது ரசிகர்களுக்குபெரும் ரசிகர்களுக்கு பெரும் செய்தி ஆகும்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மீது சூர்யா ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருந்த நிலையில் சமீபத்திய படத்தின் விளம்பர பணிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இன்னும் தமிழகத்தில் படத்தின் திரையரங்க மற்றும் டிக்கெட் முன் பதிவு தொடங்காத நிலையில் பெங்களூரு ஆந்திர மற்றும் வெளிநாடுகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது. இன்னும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் படத்தின் விநியோகம் முடிவடையாததால் இதாமதம் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். இன்னும் ஓரிரு நாளில் முன்பதிவு தொடங்கும் நிலையில் படம் வேலைநாளில் வெளியானாலும் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.