ads

புதிய கார், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜிபி முத்து

டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து

டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து

டிக் டாக் மூலம் பலரும் பிரபலம் ஆனார்கள், இதில் தமிழ் நாட்டின் ஜிபி முத்து மிகவும் முக்கியமானவர்.  தங்களது தனித்திறமையை நடிப்பிலும் நகைச்சுவையிலும் வெளிப்படுத்த டிக் டாக் செயலி ஒரு நல்ல தளமாக அமைந்தது.

வெளிநாடுகளில் தனித்திறமையை மையப்படுத்தியே அனைவரும் டிக் டாக் செயலி மூலம் தங்களது வீடியோக்களை பதிவிட்டனர். காலபோக்கில் காமெடி செய்வதற்கும், நகைச்சுவை, நடனம் போன்ற வீடியோ அதிகம் வர தொடங்கின.

இதில் தமிழகத்தில் இருக்கும் ஜிபி முத்து, மற்றவர்களை போல் டிக் டாக் செயலியை பயன்படுத்த தொடங்கினர், இவரால் முடிந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்தார்.

பலர் தங்களது திறமைகளால் பிரபலமாக, ஜிபி முத்து தனது திறமையை குறை கூறுபவர்களை திட்டுவதில் பிரபலம் ஆனார். தூத்துக்குடியில் வசிக்கும் இவரின் உச்சரிப்பே இதற்கு காரணம்.

கொரோனா காரணமாக டிக் டாக் செயலியை இந்திய அரசு முடக்க, வீடியோ பதிவிற்கு அடிமையான ஜிபி முத்து, யு டியூபில் தனது திறமையை வழக்கம் போல் தொடங்க, இவரின் வீடியோக்களை பல லட்சம் பேர் பார்க்க தொடங்க, இவருக்கு கணிசமான பணம் வர தொடங்கியது.

வந்த வருமானத்தில், ஒரு காரை வாங்கி அதற்கு காரணமாக இருந்த ரசிகர்கள் மற்றும் இவரை இழிவுபடுத்திய நபர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜிபி முத்து. இவர்களால் தான் இந்த வளர்ச்சி அடைந்துளேன் என்று பணிவாக நன்றி தெரிவித்தார்.

இவர் சன் குழுமத்தில் உள்ள சுட்டி டிவியில் ஒரு நிகழ்ச்சியில் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/7cW30pi0PPw

புதிய கார், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜிபி முத்து