ads
சூடுபிடிக்கும் நடிகர் சங்க தேர்தல் களம், நடப்பது என்ன?
கௌரிசங்கர் (Author) Published Date : May 17, 2019 12:25 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரையுலகில் நடிகர் சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கப்போகிறது என்றாலே தமிழகத்தில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் பல கிளர்சிகள் உண்டாகும். தற்பொழுது நடிகர் நாசர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். விஷால் தற்பொழுது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ளார். பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத்தலைவர்களாக நடிகர் பொன்வண்ணன் மற்றும் நடிகர் கருணாஸ் அவர்கள் இருக்கின்றனர்.
இதற்கு முன் நடிகர் சங்க தலைவர்களாக நடிகர் ராதா ரவியும், நடிகர் சரத்குமார் அவர்களும் இருந்தனர். நடிகர் சங்கத்தின் கடந்த தேர்தல் எந்த அளவிற்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் பரபரப்பானது. சினிமா நடிகர்கள், நாடக நடிகர்கள் என எல்லா நடிகர்களின் வரிப் பணங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும். சங்கத்திற்கென ஒரு முழுமையான கட்டிடம் இல்லை என்றும் அதன் பேரில் பல ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர் விஷால் தரப்பினர். நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டியபிறகு தான் எனது திருமணம் என்று உறுதியளித்தார். இப்படி படு சூடாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்றனர் விஷால் குழுவினர்.
தற்பொழுது வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி திரு.ஈ.பத்மநாபன் நியமிக்கப்படுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நடிகர் சங்கத்தின் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்க அவரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை தேர்தல் நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி பத்மநாபனிடம் நடிகர் சங்க தலைவர் நாசர் ஒப்படைத்துள்ளார். அந்த ஆவணங்களை ஏற்றுக் கொண்டதுடன் விரைவில் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.